Header Ads



தம்புள்ளயில் அல்லாஹ்வின் இல்லம் இடிக்கப்படுவது உறுதி...?

தம்புள்ளயில் அமைந்துள்ள அல்லாஹ்வின் இல்லம் சட்டவிரோதமான கட்டிடம் என சிங்கள கடும்போக்காளர்கள் கூறிவரும் நிலையில் அப்பகுதியை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று செவ்வாய்கிழமை தம்புள்ள ரங்கிரி ரஜமஹா விகாரையில் முக்கிய கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. இதனை யாழ் முஸ்லிம் இணையம் புகைப்படங்கள் ஆதாரத்துடன் பகிரங்கப்படுத்தியிருந்தது.   இங்கே பார்க்க.. http://www.jaffnamuslim.com/2012/05/blog-post_5153.html

புத்த சாசன அமைச்சின் செயலாளரின் வழிகாட்டலில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது தம்புள்ள புனித பூமி பிரதேச அபிவிருத்தி பணிகளை நகர அபிவிருத்திநகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக சர்ச்சைக்குரிய புனித பூமி பிரதேச எல்லைக்குள் அமைத்திருக்கும் அனைத்து சட்டவிரோத கட்டடங்களும் அகற்றப்பட்டு  அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது என்று தீர்மானிக்கபடுள்ளது.

இந்தக்கூட்டத்தில் கண்டியிலிருந்து வருகை தந்துள்ள உயர் பௌத்த பீடாதிபதிகளும் கலந்து கொண்டுள்ளனர். அவர்களின் இணக்கத்துடனேயே இத்தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் தம்புள்ள பிரதேச செயலாளரும் இதில் கலந்துகொண்டுள்ளார்.

தம்புள்ள பள்ளிவாசலை அகற்ற சிங்கள கடும்போக்காளர்கள் ஏற்கனவே 6 மாதம் கால அவகாசம் விதித்திருந்தார்கள். இந்நிலையிலேயே நகர அபிவிருத்தி சபை தம்புள்ள புனிதப் பிரதேசத்தை பொறுப்பேற்கவுள்ளது. இதன் பணிப்பாளராக பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபய ராஜபக்ஸ உள்ளார்.

கோத்தாபய ராஜபக்ஸ பணிப்பாளராக உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைதான் கொழும்பில் உள்ள நூற்றுக்கணக்கான முஸ்லிம் குடியிருப்புகள் சட்டவிரோதமானவை எனக்கூறி அவற்றை அகற்றியிருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் தம்புள்ள நகர அபிவிருத்தியை, நகர அபிவிருத்திச் சபை பொறுப்பேற்கும் பட்சத்தில் அங்கு அமைந்துள்ள அல்லாஹ்வின் இல்லத்திற்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதை நாம் அறிந்துகொள்ளமுடியும்.

தம்புள்ள அல்லாவின் இல்லம் மீது சிங்கள கடும்போக்காளர் தாக்குதல் மேற்கொண்டு எதிர்வரும் 20 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை ஒரு மாதம் நிறைவடைகிறது. இந்த ஒரு மாத காலப்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவோ அல்லது அவரது அரசாங்கமோ குறித்த பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படாது என்று ஒருபோதுமே பகிரங்கமாக எந்தவொரு வாக்குறுதியையும் வழங்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

மேலும் பௌத்த சாசன அமைச்சு கட்டுப்பாட்டில் இருந்த தம்புள்ள புனித பூமி பிரதேசத்தை, பௌத்த குருமார் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் எதற்காக ஒப்படைக்க வேண்டும்..?  என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.


8 comments:

  1. எதிர்பார்த்ததுதான்! இதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகளைத் திட்ட வேண்டாம். அவர்களும் கையறு நிலையில்தான் இருக்கின்றனர்.

    இறைவனிடமே மன்றாடுவோம்.

    ReplyDelete
  2. Allah enrum thunaiyaha iruppaan

    ReplyDelete
  3. சகோதரனே
    என்னுடைய வீட்டை உடைத்தால் என்ன செய்யனும்டு எனக்கு தெரியும். இறைவனுடைய வீட்டை உடைத்தால் அவனுக்கு என்ன செய்யனும்டு அவனுக்கு தெரியும்

    ReplyDelete
  4. முதலில்அல்லாஹ்வின் ஹிதாயத்து கிடைக்க இறைவனிடம் பிராத்திப்போம் .அல்லாஹ் நாடவில்லையா,அவனிடமே என்ன செய்ய வேண்டும் என்பதை ஒப்படைத்து பொறுமையாக காத்திருப்போம்.இந்த விடயத்தின் மூலம் முஸ்லீம்களாகிய நமக்கு உடன் கண்ணுக்கு நன்மைகள் தெரியாது.எதுவாக இருந்தாலும் நலவுகள் இருக்கும்.மறைவானவற்றின் ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது
    யானை(சிங்கம்)தன் தலையில் தானே மண் அள்ளிப்போட நினைக்கும்போது நாம் என்ன செய்ய முடியும்.
    Daoud Tharik

    ReplyDelete
  5. ரூம் போட்டு யோசிக்கும் போதே இப்படி ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்ததுதான் .அல்லாஹ்வுடைய மஸ்ஜித் அவன் பார்த்துக்கொள்வான் .
    அதற்காக சும்மா இருக்க முடியாது.நாமும் நம்மால் முடிந்தளவு சில சட்ட ரீதியான முன் முயற்சிகளை எடுக்கவும் வேண்டும்.அரசியல்வாதிகள்
    பெயருக்காவது குரலை ஓங்கி ஒலிக்கவேண்டும் .பள்ளிவாசலை உடைக்க முயற்சி எடுப்பவர்களுக்குரிய இறை எச்சரிக்கைகள் நிறைந்த
    குரான் வசனங்கள் அல்லது ஹதீஸ்கள் தெரிந்தவர்கள் விமர்சனங்கள் எழுதுங்கள் .

    "தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்:...

    "கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)Meeraan
    Meeraan

    ReplyDelete
  6. நாங்களும் தான் என்ன செய்வோம். எல்லா விளையாட்டுகளையும் விளையாடிப்பார்த்து விட்டோம். எல்லோரும் எம்மை யூஸ் பண்ணி விட்டு இப்போ கைவிட்டு விட்டார்கள். இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கி புலியை அடிச்சபோது கள்ள மெளனம் செய்தோம், இப்போ இஸ்ரேல் எம்பசி திறக்கிறானுவள், நம்மட கோஷ்டி கதை அடிக்குகுது! போர்க்குற்ற விசாரனைக்கு எதிராக ஜெனீவா போனோம் ஆனால் மிலாடிச் விசாரனையைப்பார்த்து விலாசம் காட்டிறோம். அந்த மிலாடிச்சை கைது செய்த அமெரிக்காவை சாத்தான் என்கிறோம். அந்த சாத்தானின் சினேகித இஸ்ரேல் எம்பசி திறக்கிற மஹிந்தாவுக்கு சப்போட். இப்ப அரசியல் வாதிகளும் கையறு நிலையில் இருக்கிறார்கள் எனச் சமாளிப்பிக்கேசன் சொல்லி நாமளும் கையறு நிலைக்கு வந்து விட்டோம்.

    ReplyDelete
  7. 1st we hv to try our level best,end of our effort allah's help s there
    we cant believe our Muslim politicians,they are fear only rajapaksa & his goverment,dnt hv fear in allah & his govedrment
    believe allah ,ask duas in thahajuth time
    allah never waste our efforts
    may allah forgv our sins

    mirjahan,
    medical student,
    eastern university,
    batticaloa.

    ReplyDelete
  8. i like your comant,i think they have big plan agains to muslim so we must workup & unaity we have to pray from allah for unaity & peace

    ReplyDelete

Powered by Blogger.