Header Ads



அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளராக நியமனம்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாண சுகாதார,விளையாட்டு துறை அமைச்சரின் இணைப்பாளர் எம்.யஹ்யாகான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாத் பதியுதீனிடம் இருந்து தமது அமைப்பாளர் நியமனக் கடித்த்தினை இன்று பெற்றுக் கொண்டார்.

யஹ்யாகான் கடந்த கல்முனை மாநகர சபை  தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்வர்.சிறந்த சமூக சேவையாளரான யஹ்யா கான்,முன்னால் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நியமனக் கடிதம் கையளிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும்,கட்சியின் தேசிய இணைப்பளாருமான ஹூனைஸ் பாருக்கும் கலந்து கொண்டார்.


No comments

Powered by Blogger.