Header Ads



மீன்பிடித்த சிறுவனுக்கு வந்த சோதனை

மலேசியாவை சேர்ந்தவன் பிலிப் முவான் (12). இவன் அங்குள்ள படாங் அய் என்ற இடத்தில் உள்ள ஏரியில் தூண்டில் போட்டு மீன் பிடித்தான். தூண்டிலில் இருந்து மீனை அகற்றிய அவன் அதை கொல்ல மீனின் தலையை வாயில் வைத்து பல்லால் கடித்தான்.

அப்போது மீன் வழுக்கி அவனது வாய் வழியாக தொண்டைக்குள் சென்று சிக்கியது. அந்த மீன், 4 செ.மீட்டர் நீளம் உடையது. எனவே, சிறுவன் பிலிப் மூச்சு விட முடியாமல் திணறினான். உடனே அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு ஆபேரஷன் மூலம் தொண்டையில் சிக்கிய மீனை டாக்டர்கள் அகற்றினர். இச்சம்பவத்தால் அவன் 14 மணி நேரம் தவித்தான்.

No comments

Powered by Blogger.