Header Ads



குற்றச்செயல் பட்டியலில் யாழ்ப்பாணம் முதலிடம்

யாழ். மாவட்டத்தில் அதிக குற்றச் செயல்கள் அண்மையில் இடம்பெறும் பொலிஸ் பகுதியாக யாழ்ப்பாணம் பொலிஸ் பிரதேசம் காணப்படுவதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.எல்.பெரேரா குறிப்பிட்டார்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் இதைத் தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்கள் அதிகம் இடம்பெறும் பகுதிகள் பட்டியிலில் முதலாம் இடத்தில் யாழ்ப்பாணப் பொலிஸ் பிரதேசமும் இரண்டாம் இடத்தில் சாவகச்சேரி பொலிஸ் பிரதேசமும் மூன்றாம் இடத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரதேசமும் காணப்படுவதாகவும் இந்நிலைமையைத் தொடர விடாது குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதுடன் குற்றவாளிகள் பலரும் இப் பகுதிகளிலிருந்து கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டள்ளனர் எனவும் குறிப்பிட்டார்

1 comment:

  1. குற்றச் செயலில் முதலிடம் இலங்கையிலா?வட மாகாணத்திலா?.குற்றச் செயல் அதிகரிப்புக்கு அரச நிர்வாகம்,மாகாண சபை ஆட்சியும் சரியில்லையென அர்த்தம் கொள்ளலாமா?
    Yaal Mannan

    ReplyDelete

Powered by Blogger.