Header Ads



இலங்கையில் இஸ்ரேலிய தூதரகம் ஆரம்பிக்கப்பட அரபு நாடுகள் தூங்கிக் கொண்டிருப்பதே காரணம்

அரபு நாடுகளிடம் அரசியல் சாணாக்கியம் இல்லை. அரபு நாட்டு தூதரகங்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் இஸ்ரேலிய தூதரகம் ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும் நிலையிலவ் அவர்கள் மௌனமாக இருக்கின்றனர் என மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

அமெரிக்காவின் அழுத்தங்கள் காரணமாகதான் இஸ்ரேல் இலங்கையில் கால் பதிக்க முற்படுகிறது. ஆசிய நாடுகளில் துவேச மனப்பான்மை அதிகமாக நிலவி வருகிறது. இலங்கையையும் அது விட்டுவைக்கவில்லை. இதனால் இலங்கையின் முன்னேற்றம் தடைப்படுகிறது.

இந்நிலையில் இலங்கையில் இஸ்ரேலிய ஊடுருவல் நாட்டின் ஐக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனைய மதங்களுடன் பிளவை ஏற்படுத்துவதோடு முஸ்லிம்களுக்குள்ளேயும் பிளவுகளை ஏற்படுத்துவார்கள். சமாதானத்தை விரும்பும் சகலரும் இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் அமைப்பதை எதிர்க்கவேண்டும்.

நாட்டின்  பொருளாதாரம் எப்படிப்போனாலும் இன ஐக்கியத்தை இல்லாதொழிக்கும் சர்வதேச பலம் வாய்ந்த சக்கியே இஸ்ரேல். எனவே இஸ்ரேல் தூதரகத்தை இலங்கையில் ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி சிந்திக்கவேண்டும். இலங்கை தூதரகம் இலங்கையில் ஆரம்பிக்கப்படுமாயின் அதனை முஸ்லிம்கள் எதிர்ப்பார்கள் என்றார்.

2 comments:

  1. நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம் திரு.மவ்லானா அவர்களே?

    உலகின் அதிகமான போர்களுக்கும், பிரச்சினைகளுக்கும் பின்னல் யூதர்களே இருந்துள்ளனர், இருக்கின்றனர்.

    ReplyDelete
  2. அனைத்து அரசியல்வாதிகளும் அறிக்கை மட்டும் விட்டு தங்கள் இருப்பை காப்பாற்றிக்கொள்வார்கள் .ஒரு பருப்பும் வேகாது.அரபு நாடுகளே முன்,பின் கதவுகளால் உறவு வைத்திருக்கும் போது ஸ்ரீ லங்கா இவ்வளவு காலமும் தூதுவராலயம் திறக்காமல் இருந்திருப்பார்களா?மறைமுகமாக இயங்கியதை முஸ்லீம்கள் வெறும் வெத்து வேட்டு
    தெரிந்த கொண்டு பகிரங்கப்படுத்தி இருக்கிறார்கள் .
    அனுராதபுரம் ,தம்புள்ள,தெஹிவள ,மாபோல இது போன்ற அசம்பாவிதங்கள் நடை பெற்றதற்கு பின் புலத்தில் யூத, RSS
    கைகள் ,கைக்கூலிகள் நிச்சயமாக இருந்திருப்பார்கள்
    Meeraan

    ReplyDelete

Powered by Blogger.