Header Ads



இலங்கை குறித்து அமெரிக்கா அறிக்கை வெளியிட்டது

அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தினால் கடந்த வருடத்துக்கான மனித உரிமை செயற்பாடுகள் குறித்த வருடாந்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2010ம் அண்டுடன் ஒப்பிடும் போது, இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாடுகளில் கடந்த ஆண்டு முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன. இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக கருதப்படுவதாகவும் அமெரிக்காவின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1 comment:

  1. இவங்களுக்கு இதே தொழிலாகி விட்டது.
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.