Header Ads



போலியோ அச்சுறுத்தல் - அவசர நிலையை பிரகடனப்படுத்தியது உலக சுகாதார நிறுவனம்

ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் கடந்த இரண்டு வருடங்களில் போலியோ நோய் கடுமையாக பாதித்துள்ளதை அடுத்து, உலக சுகாதார நிறுவனம் போலியோ குறித்து அவசரநிலையை பிரகடனம் செய்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் கடுமையாகப் பரவும் ஒரு நோயாகவே போலியோ இருக்கிறது. அத்துடன், போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட சில நாடுகளிலும் அது மீண்டும் பரவியுள்ளது.

போர் காரணமாகவும், தொற்றுநோய் தடுப்பு மருந்துகள் மீது போதுமான நம்பிக்கை இல்லாமை காரணமாகவும் சில நாடுகளில் மிகச் சிறிய அளவிலான குழந்தைகளுக்கு மாத்திரமே போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

போலியோவை ஒழிப்பதற்கான உலக முயற்சி தோல்வியடையுமானால், அந்த நோய் மீண்டும் உலக அளவில் பரவும் நிலை உருவாகும். எனவே போலியோ பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் அனைத்து நாடுகளும், தமது நாட்டு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்தை கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.