சரத் பொன்சேக்கா புதுக் கட்சி ஆரம்பிக்கிறார்
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் கடந்த திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா “ஜனநாயக கட்சி“ என்னும் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் கூறுகையில்,
“ஜனநாயக கட்சி“ என்னும் அரசியல் கட்சியினை பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களை தேர்தல் திணைக்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அவர்களின் அனுமதி கிடைக்கும் வரை காத்திருக்கிறோம்.
பொன்சேகாவின் வழிநடத்தலில் உருவாகவிருக்கும் இக்கட்சியின் தலைவராக நான் இருப்பேன். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுண ரணதுங்கவும் அனோமா பொன்சேகாவும் கட்சியின் இணை உப தலைவர்களாக செயற்படவுள்ளார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் கட்சியின் பொதுச் செயலாளராக செயற்படுவார்” என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜனந்த - ஏனைய உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் கட்சி பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.

ஜனநாயக கட்சியில், இராணுவ ஜனநாயகமா?தம்புள்ள பிக்கு பள்ளிவாசல்,கோவில் போன்றவைகளை எடுக்கச் சொன்னார்.இவர் ஜனநாயக முறைப்படி தமிழ்,முஸ்லீம்களுக்கு எப்படி ஆப்பு வைக்கப் போகிறாரோ?.
ReplyDeleteMeraan