Header Ads



றிசாத் பதியுதீன் மன்னிப்பு கேட்பாரா..?



மன்னார் ஆயர் அதிவண இராயப்பு ஜோசப்பை தம்புள்ள பிக்குவுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இந்த பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் அத்துடன் அவர் இவ்வாறு பேசியமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே செல்வம் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தம்புள்ளயில் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டபோது பௌத்த போதனைகளைப் போதிக்கும் பிக்கு ஒருவரே முன்னின்று செயற்படுத்தினார். இதனை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இவ்வாறான புத்த பிக்குவுடன் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பை ஒப்பிட்டு அமச்சர் ரிஷாட் பதியூதீன் இங்கு பேசியிருக்கின்றார்.

மன்னார் ஆயர் இந்நாட்டில் தீர்வு ஒன்று வர வேண்டும் என்று குரல் கொடுத்தவர். அவர் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளித்தார் என்பதற்காக நான்காம் மாடியில் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

அவ்வாறான ஒருவரை புத்த பிக்குவுடன் ஒப்பிட்டுப் பேசியமை குறித்து வன்மையாகக் கண்டிக்கின்றோம். அது மாத்திரமின்றி அவ்வாறு பேசியமைக்காக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இந்த பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.

மேலும் இவ்வாறான நிலைமைகளே இனப்பிரச்சினை தீர்க்க முடியாமைக்கான காரணிகளாகும். எனவே வீண் பேச்சுக்களை பேசி நாட்டை குட்டிச் சுவராக்காது நியாயமான அரசியல் தீர்வொன்றை பெறுவதற்கு அரச கூட்டமைப்புடன் பேசித் தீர்க்க வேண்டும் என்றார்.

11 comments:

  1. மன்னார் ஆயர் புலிகளுக்குக் குடை பிடித்ததால், அடைக்கலனாதனுக்கு இந்தக் கவலை.

    மன்னார் ஆயர்தான் முழு மன்னார் முஸ்லிம்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
    ரிஷாத் மன்னிப்புக் கேட்பதற்கு ஒன்றுமில்லை.

    ReplyDelete
  2. யார் யாரிடம் மன்னிப்பு கேட்பது.உண்மையைச் சொன்னால் உறைக்கத்தான் செய்யும்.ஆயர் உங்களுக்கு எத்தனை ஏக்கர் காணி தருவதாகச் சொன்னார்.
    Meraan

    ReplyDelete
  3. செல்வம் எம்.பி புலிகளின் முகவர் என்பதால் புலி நிறத்தை கொண்ட மன்னார் ஆயரின் குறைகளை சுட்டிக்காட்டினால் தாங்க முடியவில்லையாமே,ஏன் அய்ய முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்கின்றீர்கள்,சொந்த மண்ணில் முஸ்லிம்கள் வாழ வந்தால் வழிவிட்டு வேடிக்கை பாருமேன்,உமக்கென்ன பிரச்சினை அப்பன் கொண்டுவந்த காணியோ,கையாலாகாத வடக்கு முஸ்லிம்களின் வேதனையினையும்,வயிற்று எரிச்சலினையும் வாங்கிக்கட்டி கொள்ளாதீம்ம,முஸ்லிம்களும் புலியோடு சேர்ந்து உம்மை போன்ற காட்டிக் கொடுக்கும் தலைமையுடன் வந்திருந்தால் அழிவு தான் கடவுள்
    தான் முஸ்லிம்களை பாதுகாத்தார். -
    தழிழினியன் கிளிநொச்சி

    ReplyDelete
  4. Naushad dehiwala23/05/2012, 18:28

    ஏன் அப்பு ரிஷாத் கூறியதில் என்ன தவறு . தென்னிலங்கை நிலம் எல்லாம் சிங்களவருக்கு சொந்தம் என்று பிக்கு சொல்கிறார் வட இலங்கை நிலம் எல்லாம் தமிழருக்கு சொந்தம் என்று ராயப்பு சொல்கிறார் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் . மன்னிப்பா தமிழில் மட்டும் இல்லை உலகில் உள்ள எந்த மொழியிலும் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு . வேண்டுமானால் புலிகள் எமக்கு செய்த அநியாயத்துக்கு அவர்களின் வால்கலாகிய நீங்கள் எங்களிடம் மன்னிப்பு கேளுங்கள்

    நவ்ஷாத் தெஹிவல

    ReplyDelete
  5. தமிழர்களுக்கு நியமனம் வழங்கும் போதும்,எதிர் தீர்கள்,முஸ்லிம்களுக்கும் நியமனம் வழங்கும் போது எதிர்தீர்கள் அப்படியெனில் ஏன் அப்பனே உமக்கு தமிழனம்,அதற்கு இஸ்லாமிய தமிழனான றசாத் அய்யா எவ்வளவோ நல்லம்,அவர் எமது தமிழன் காணியை சூறையாடவில்லை,தமிழனுக்கு காணிகளை வாரி வழங்கியுள்ளார்,அவர் எப்படி அய்யா மோசமானவராக இருக்க முடியும்.புலியின் பெயரால் நிர் செய்த வேளைகளை நாம் அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பினால் உமக்கும் புனர்வாழ்வு தான்,நீர் மறைத்து வைத்த ஆயுதங்கள்,உம்மால் நாம் இழந்த உயிர்கள் எத்தனை எத்தனை,புனர்வாழ்வு பெறும் எமது உறவுகளை வெளியில் விடச் சொல்கின்றீர்களோ,அய்யோ பட்டது போதும் இந்த புலிக்காரர்கள் இனி நாம் குடும்பத்துடன் வாழவிடுங்கள் அய்யா,நீங்களும்,ஆயர் அய்யாவும் செய்த உதவிகளை விட தமிழினத்துக்கு செய்த உபத்தரோகம் வரலாற்று பதிவு அடுத்த தேர்தலுக்கு வாரும்,நல்ல ஒட்டு...அய்யா றிசாத் அவர்களே,ஒரு சில காட்டிக் கொடுப்பவர்கள் தமிழினத்தில் இருக்கத் தான் செய்வினம்ஈஅதலால் எமது தமிழ் பேசும் மக்களுக்கு தற்போது நீங்கள் வழங்குவது போன்று,தொடர்ந்து வழங்குங்கள்.மடு கத்தோலிக்க கிராமங்களில் எத்தனை பாடசாலை கட்டிடங்கள்,விவிசாய கட்டிடங்கள்,பாதைகள்,முல்லைத்தீவில் எத்தனை அபிவிருத்திகள்,இதெல்லாம் தமிழர்களாகிய எங்களுக்குத் தான் நன்றி அய்யா,நன்றி

    எஸ்.சிறிதரன்
    மடு-கட்டையடம்பன்

    ReplyDelete
  6. தலைவா றிசாத் மினிஸ்ட்டர்

    நீ தான் எம் தலைவன்
    வடக்கின் வீர மகன்
    தமிழன் எம்மையும் அடக்கி வைத்திருந்த அடிமை பூட்டை உடைத்தெரிய காட்டிய வழி,மண்ணார் மக்களின் விழியை திறக்க தைரியம் தந்தாய்,உன் பாதை எமது பாதை .................மன்னிப்பு ஏன் நீங்கள் தலைவா கேட்கவேண்டும்....எமது சகோதர முஸ்லிம் இனத்தை பரிதவிக்க செய்த நாங்கள் தான் கேட்க வேண்டும்...ஓ முஸ்லிம் வடமாகாண மக்களே எம்மை மன்னித்துவிடு.........

    சவேரியார் குரூஸ்
    காடாஸ்பத்திரி

    ReplyDelete
  7. அமைச்சர் றிசாத் அவர்கள் பாராளுமன்றத்தில் தெரியாமல் சொல்லி விட்டார் போலும்,மன்னார் ஆயரை தம்புள்ள தேரருக்கு ஒப்பிட்டு,தமிழீழத்தினை தோற்றுவிக்க குரல் கொடுத்தவர் என்று சொல்லியிருந்தால்,செல்வம் எம்.பியின் கருத்து சரியாக வரும்,சரி பரவாயில்லை கொஞ்சம் பிழைத்து விட்டது,அடுத்த தடவை பேசினால் அதனை சொன்னால் சாலச் சிறந்தது.

    ReplyDelete
  8. என்னய்யா இது? நீங்கள் பேசினால் அது உரிமைக்குரல் நாங்கள் பேசினால் அது வீண் பிரச்சனை என்கிறீர்கள். 30 வருடங்களாக புலிகள் படுத்திய கொடுமைகளை இப்போது நீங்கள் தொடர்கிறீர்களா? ஓஹோ... நீங்கள் பசுத்தோல் போத்திய புலிகளாச்சே...ஆயர் சொல்வது உங்களுக்கு வேதவாக்காக இருக்களாம், ஆனால் உங்கள் போராட்ட வெறியில் உடமைகள் இழந்து உறவுகளை இழந்து இத்தனை வருடங்களாக அகதிகள் எனும் பெயருடன் சொந்த மண்ணை துரந்து வாழ்ந்த மக்களை தம் இடத்தில் வாழ இடம் கொடுக்க விரும்பாத எவனுமே மனிதனல்ல. M.S.B.KHAN

    ReplyDelete
  9. செல்வத்தின் சரிதையை கொஞ்சம் பார்போம் செல்வம் 1975 களில் திடீரென்று காணாமல் போயுள்ளார் அப்போது பெற்றோர்கள் நிலை இழந்து அழுகையில் இருந்தனர்,அப்போது வந்த மாம்பழப் பாதிரியார் உமதுமகன் பாதுகாப்பாக வன்னிகாட்டில் ஆயுதப்பயிற்சியில் உள்ளார் என்றதுமே அவர்கள் அழுகையை நிறுத்தினர், பின்னர் தமிழ் நாட்டில் பயிற்சி பெற்றார் யுத்தத்தில் ஈடுபட்டார்,நான் இங்கு குறிப்பிட விரும்புவது சில பாதிரிகள் யுத்தத்தை தூண்டுபவர்களாக இருந்தார்கள் என்பது செல்வம் அடைகலநாதனின் சரிதையிலே உள்ளதை அவர்
    மறைக்கமுடியுமா ?-விடத்தல்தீவிலிருந்து

    ReplyDelete
  10. சோலையன் குடும்பி சும்மா ஆடுமா?
    yaal mannan

    ReplyDelete
  11. enna nadan thaalum summa irungappa
    ellam awan seyal

    ReplyDelete

Powered by Blogger.