கல்வியமைச்சரின் மூளையை பரிசோதிக்க வேண்டும் - அஜித் பிரசன்ன
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவின் மூளையை பரிசோதனை செய்ய வேண்டுமென தென் மாகாணசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.
தென் மாகாணத்தில் 350 தேசிய பாடசாலைகள் காணப்படுகின்றன. இந்தப் பாடசாலைகளுக்கு மனித மற்றும் பௌதீக வளங்கள் கிடைக்கப்பெறவில்லை.
கிங்தொட்ட காமினி வித்தியாலயத்திற்கு கரும்பலகை ஒன்றை வாங்க பணமில்லை. அமைச்சர் பந்துல பாடசாலைகளை பார்வையிடாமலேயே இவ்வாறு கருத்து வெளியிட்டு வருகின்றார்.
ஒரு தடவை 2500 ரூபாவில் ஒருவர் வாழ்க்கையை நடத்த முடியும் என குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான கூற்றுக்களினால் நாம் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றோம் என அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

Post a Comment