Header Ads



வடக்குகிழக்கு தமிழர்களின் தாயகமென்பதை நிரூபிக்க முடியுமா..? எல்லாவள மேதானந்த தேரர்

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழரின் தாயகம் எனக் கூறுவது அப்பட்டமான பொய். அங்கு வாழ்ந்து வந்த சிங்களவர்கள் இன்று ஏதுமற்றவர்களாக உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு, தமிழர்களின் தாயகம் என்பதனை நிரூபிக்க முடியுமா? எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

 பௌத்த விகாரைகள் அழிக்கப்பட்டே வடக்கு, கிழக்கில் இந்துக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கில் கோவிலை உடைத்து கட்டப்பட்ட ஒரு பௌத்த விஹாரையைக் கூற முடியுமா? திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் உள்ளிட்ட புகழ்பெற்று விளங்கும் அனைத்து இந்துக் கோயில்களும் பௌத்த விஹாரைகள் இடிக்கப்பட்டு அதன் மீதே கட்டப்பட்டுள்ளன.

நாம் இந்துக் கோயிலை இடித்து அழித்தோமா? நாம் அனைவரையும் ஒன்றாகவே மதிக்கின்றோம். இந்துக் கோயிலை கட்டுவதற்கு நான் கூட நிதியுதவி வழங்கியுள்ளேன். தமிழ் கூட்டமைப்போ பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு அரசியல் இலாபம் தேடுவதற்கு முயற்சிக்கின்றது.

வடக்கு, கிழக்கு தமிழரின் தாயகம் என்பது அப்பட்டமான பொய். தமிழர் பகுதிகள் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதும் அப்பட்டமான பொய்யாகும். சிங்களவர்களின் பகுதிகள் தான் ஆக்கிரமிக்கப்படுகின்றன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வந்த சிங்களவர்கள் இன்று ஏதுமற்றவர்களாக இருக்கின்றனர்.

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதனை உங்களால் நிரூபிக்க முடியுமா? இலங்கையின் எந்தவொரு பகுதியையும் உங்களின் தாயகம் என்று கூற முடியாது. தமிழர்கள் இந்த நாட்டில் வாழ்பவர்கள்.
  
ஏறாவூரில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இணைந்தே பௌத்த விகாரையை நிர்மாணித்தனர். தமிழர்களே புத்தர் சிலைகளை தலையில் தூக்கி சென்றனர் என்பதனால் இன, மத, பேதமின்றி சகலரும் ஐக்கியப்பட்டு கைகோர்த்து அபிவிருத்தி செய்வதற்கு ஐக்கியப்படுவோம். இது உங்களுடையதும் எங்களுடையதும் நாடாகும் என்பதனால் சகோதரர்கள் போல் செயற்படுவோம். என்றார்.
 


4 comments:

  1. பௌத்தமதமே இந்தியாவில் இருந்துதான் வந்தது இவர் என்ன இப்படி சொல்ல்கிறார்

    ReplyDelete
  2. இவனுகள் எதைப் படித்து வரங்களோ தெரியவில்லை. ஒன்று மட்டும் புரியுது எங்கயோ ரூம் போட்டு யோசிக்கிரனுகள்

    ReplyDelete
  3. இலங்கை தீவில் தமிழர்களும் சிங்களவர்களும் வந்தவர்கள் தான் இந்த தீவின் உண்மை குடிகள் வேடர்கள் வேடுவோர் அவர்

    இலங்கைல் கிழக்கு மாகாண மட்டகளப்பு தமிழகத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது

    வி.சி.கந்கையா அவர்கள் “மட்டக்களப்புத் தமிழகம்”(1964) என்னும் நூலில், “விஜயன் கி.மு. 540இல், பாண்டிய நாட்டிலிருந்து கொண்டு வந்த தமிழ் மக்களைக் ‘கதிராகல’ என்னும் மலைச்சாரலிற் குடியேற்றினான் என்றும், இப்பகுதி அக்காலத்து வேடராற் குடியிருக்கப் பெற்றதென்றும் சிங்கள சரித்திர நூல்கள் கூறுகின்றன. அவற்றுட் குறிப்பிடப்பெற்ற ‘கதிராகல’ மலைப்பகுதி ஏறக்குறைய 1200 அடி உயரமுள்ள குன்றுகளாக இத் தமிழகத்திலே மட்டுநகரின் தென்மேல் திசையில் 17 மைல் தூரத்தே இன்றும் உள்ளது”(பக்.6-7) எனக்குறிப்பிட்டுள்ளார். http://noolaham.net/project/25/2469/2469.pdf

    மட்டகளப்பு கடல் வழி குடியேற்ற வரலாற்றுச் சான்று

    இலங்கை இந்து சமுத்திரத்தின் கடல் பயணத்தின் கேந்திர நிலையமாக திகழ்கிறது. அதில் முக்கியமாக வங்கக் கடலின் வடக்க்கிலும் மேற்கிலும் இருந்து வரும் கடற் பயணக்காரருக்கு படகுகளை கரை சேர்க்கும் இயல்லு கிழக்கு கரையோரத்துக்கு இருந்தது. இதனால் ஒரிசா (கலிங்கம்)ஈ வங்கம், முதலிய இந்திய வடகிழக்குப் பிரதேசங்களில் இருந்தும், சேர, சோழ, பாண்டிய எனும் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்களாலும் மட்டக்களப்பு மக்கள் குடியேற்ற வளர்ச்சி பெற்றது, அதன் தொன்மையை காட்டுகிறது
    http://www.battinews.com/2012/01/blog-post_8229.html

    மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் “வேடர்கள்” புலிந்தர்-புலியர், இயக்கர், நாகர், திமிலர், கழுவந்தர், முக்கியர்
    http://inioru.com/?p=26230&cpage=1#comment-24346

    ReplyDelete
  4. . தேரரே , உங்களுடைய கட்டுரையில் கடைசிப் பந்தி வரவேற்கத்தக்கது .உங்களாலேயே உங்கள் தாயகத்தை நிரூபிக்க முடியாது .நாங்கள் படித்த சரித்திர பாடத்தில் விஜயன் என்ற இளவரசனை அவனுடைய தோழர்களுடன் தகப்பனார் (குறு நில மன்னர்)நாடு கடத்தினார் .அவர்கள் எங்கள்தாயகம் வந்து குடியேறி விஜயன் குவேனியையும் மற்றவர்கள் ஏனைய பெண்களையும் மணம் முடித்து பல்கிப் பெருகினர் .வந்தவர்கள் சும்மா வராமல் அரச மரச் செடியை கொண்டு வந்து நாட்டினர், இதனால் தான் வந்தது வினை ..

    முஸ்லீம்கள் ஒன்றும் வந்தேறு குடிகலில்லை .அரபு நாட்டிலிருந்து வியாபாரத்திற்கு வந்தவர்களின் நேர்மை ,பண்புடன் பழகும் தன்மை இன்னும் பல நல் ஒழுக்கங்களைப் பார்த்து இலங்கைப் பெண்கள் அவர்களை மணம் செய்தார்கள் இதிலிருந்து பெருகியதுதான் இஸ்லாமும் ,முஸ்லீம்களும் .
    அடுத்து முஸ்லீம்களிடம் சாதிப் பிரச்சனை இல்லைஎன்று தெரிந்து ,சாதிப்பிரட்சனையில் சிக்கித் தவித்த மக்களுக்கு இஸ்லாம் ஒரு வரப்பிரசாதம் என்றுணர்ந்து இஸ்லாத்தை தழுவினார்கள் .இலங்கை ,இந்தியா போன்ற நாடுகளைச்
    சேர்ந்தவர்கள் இந்த நிமிடம் கூட இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .
    தேரரே ,திறந்த மனதுடன் சரித்திரங்களைப் புரட்டிப்பாருங்கள்.இஸ்லாத்தை நோக்கி வாருங்கள் ,அல்லாஹ் உங்களுக்கும் ,நம் நாட்டிற்கும் ரஹ்மத் செய்வானாக .
    Daoud Tharik

    ReplyDelete

Powered by Blogger.