கொழும்பிலுள்ள கட்டார் தூதரகம் குறித்து கவலை தெரிவிப்பு
ஜே.வஹாப்தீன்
கட்டார் தூதரகத்துக்குச் செலும் மக்கள் அனைவருக்கும் திருப்திகரமாகவும், உடனடியானகவும் தேவைகள் நிறைவேற்றப்படுவதில்லை என ஒலுவில் உலமா சபைத்தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கட்டார் தூதரகத்தின் கொன்சியுலர் பிரிவு பல சேவைகளை செய்து வருகின்றது. நாளாந்தம் மக்கள் அங்கு சென்று தங்களது வேலைகளை பூர்த்திசெய்து வருகின்றார்கள். கட்டார் தூதரக்த்திற்காக அங்கு ஒன்றுசேரும் மக்களின் தொகை நாளாந்தம் அதிகரித்த வண்ணமே உள்ளன. கட்டார் தூதுவராலயத்தின் தூதுவருக்கு ஒலுவில் ஜம்மியத்துல் உலமா சபைத்தலைவரும், அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய அஷ்ஷேக் எம்.எல்.பைசல் மௌலவி ஒப்பமிடப்பட்ட கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்தாவது;
‘மக்களின் தேவைகளை பூர்த்திசெய்து கொடுப்பதில் இலங்கைக்கான கட்டார் தூதரகம் சிறப்பாக செயற்பட்டாலும் பல குறைகளை எம்மால் காணமுடிகின்றது. அங்கு தேவைகளை நிறைவேற்றச்செல்லும் மக்கள் சார்பாக பின்வரும் விடயங்களை தெரிவித்துக் கொள்கிறேன். உரியவர்கள் இதனை கவனத்திற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
நாளாந்தம் 750 – 1000 உட்பட்ட மக்கள் அங்கு செல்கின்றார்கள். ஆனால். 100 – 150க்கு இடைப்பட்ட மக்களின் தேவைகளே பூர்த்தி செய்யப்படுகின்றன.
மீதி மக்கள் அங்கு அலைகிறார்கள். நீண்ட தூரங்களில் இருந்து வருகின்றவர்கள் விரிப்புக்களை கொண்டுவந்து அடுத்தநாள் முதல் இடத்தினை பெறுவதற்காக பாதை ஓரங்களில் அமர்ந்து கொள்கின்றார்கள். காலை 2.30 மணிக்கு முன்பாக மக்கள் தங்களுக்குள் வரிசையாக நின்று இலக்கங்களை பெற்று காத்துக்கொண்டு நிற்கிறார்கள். அவ்வாறு காத்துக்கொண்டு நிற்கும் மக்களுக்கு கூட அடுத்த நாள் வேலையினை பூர்த்திசெய்ய முடியாமல் போகின்றது.
காலை 9 – 11.30 மணிவரை தங்களது வேலைகளை ஆரம்பிக்கும் அப்பிரிவு ஒரே ஒரு கரும பீடத்தினையே வைத்துகொண்டு தஸ்தாவேஜுகளை பெறுகின்றது. 150க்கு மேல் இலக்கங்களை தனக்காக ஆக்கிக் கொண்டவர்கள் 11.30 மணியுடன் திருப்பி அனுப்பப்படுகின்றார்கள். அங்கு வரிசையில் நீண்ட நேரம் மக்கள் காத்துக்கொண்டு இருப்பது மிகவும் கவலையையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்துகின்றது. மனிதன் என்ற வகையில் அவனுக்கான கௌரவம் அங்கு பேணப்படுவதில்லை. அவனது இயற்கை தேவைகளைக்கூட நிறை வேற்ற எவ்வித வசதியும் அங்கு கிடையாது.
அதிகமான மக்கள் நீண்டதூரம் இருந்து வருபவர்கள் கொழும்பை பற்றி அதிகம் தெரியாதவர்கள், வாழ்க்கையில் மிகுந்த வேதனைகளை அனுபவித்தவர்கள் ஒரு வேலைக்காக கட்டார் செல்ல தங்களது ஆவணங்களை உறுதி செய்ய வருபவர்கள் அவர்களில் அதிகம் ஒரு நாளைக்குள் அவ்வேலை முடிபடாதால் கடன் ட்டு பிரயாணமானவர்கள் கஷ்டப்பட்டவர்கள் செய்வதறியாது தடுமாறுகின்றனர், மனச் சஞ்சலத்துக்கு உட்படுகின்றனர். கட்டார் தூதரகத்துக்குப் பொறுப்பானவர்களே நீங்கள் இதனை கவனிக்கமாட்டீர்களா? மக்களுக்கு இலகுத் தன்மையினை ஏற்படுத்தி கொடுக்கமாட்டீர்களா?
நீண்ட வரிசையில் மக்கள் நீண்ட நேரம் நிற்கின்றார்களே அவர்களின் மனநிலையை நீங்கள் அறியவில்லையா? 6,7 மணித்தியாலங்களாக நின்ற நிலையில் பாதையின் ஓரங்களில் நிற்கிறார்களே இவர்களின் உரிமைகளை நீங்கள் நினைத்து பார்த்தீர்களா? ஏன் உங்களால் தேவையான கரும பீடங்களை உருவாக்கி சகலரின் தேவைகளையும் துரிதமாக நிறைவேற்றிக் கொடுக்க முயற்சிக்க முடியாது? காத்திருக்கும் மக்கள் அமர்ந்து கொள்வதற்கு வசதி வாய்ப்புகளை உருவாக்கலாமே.
மக்கள் பணம் செலுத்தியே தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள் எனவே உரிய கௌரவம் அவர்களுக்கு கொடுக்கப்படல் வேண்டும் அல்லவா? மேற்படி விடயங்களை கவனத்திற் கொண்டு மக்களுக்கு இலகுத் தன்மையை பெற்றுக் கொடுக்குமாறு அம்மக்களின் சார்பாக இதனை முன்வைக்கிறேன்’ என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டார் தூதுவராலயத்தில் மட்டுமல்ல, சில அரச அலுவலகங்களிலும் இதே நிலைமைதான்.
ReplyDeleteஇந்தக் கடிதத்தை கட்டார் அரசுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் இதன் பிரதி, கட்டாரில் இருக்கும் சர்வதேச அறிஞர் யூசுப் அல் கர்ளாவிக்கும்
அனுப்பி வைக்கப்பட வேண்டும். யூசுப் அல் கர்ளாவி அவர்கள் இலங்கை முஸ்லிம்கள் குறித்து,
நாம் தனித்தவர்கள் அல்ல, சர்வதேச முஸ்லிம் உம்மத்தின் ஒரு அங்கம் என்பதை வலியுறுத்தி
ஒரு அறிக்கை விட்டிருந்தார். ஆகவே அவர் நம்மை மறந்திருக்க மாட்டார்.
கட்டார் மன்னருடன் நெருங்கிய தொடர்புடைய அறிஞர் யூசுப் அல் கர்ளாவி
அவர்கள் இது விடயத்தில் உரிய இடத்தில், விடயத்தை சேர்க்க உதவலாம்.
இயற்கைத் தேவைகளை பூர்த்தி செய்ய எந்த வசதியும் ஏற்படுத்தப் படவில்லை
என்பது மனித நேயமற்ற வேலை.
Good comment,please send a copy to Dr;Yoosuf Al Qarzavi.please please for our musli and the ISLAM.
ReplyDeleteAs a Sri-Lankan I do appreciate your letter Mr.President of Jammiathul Ulam, Oluwil. As you think I thik it is not the duty of qatar embassy ot provide to public facilities to the public and olso it is not provided at any embassies in sri-lanka. this is the responsiblities of the CMC.(Colombo Municipal ).
ReplyDeleteAccouding to my knowledge about 25 employees are working at the Ministry of foreign affairs (consular section) of sri-Lanka for about 1000 customers. But at the Qatar embassy ONLY TWO OFFICERS ARE there for about 300- 350 customers and they work hard from 9.00 am - 7.30 pm without OT even. And with edition to that they have to cover the public and as well the recruiting agencies too.
and I think these two officers have cover about totally 600 papers per day.
Then why don't you even appreciate them and thank them but make complai against them.
Pleas think two times before express on word.
உலகத்திலே பெரிய பணக்கார நாடு காதர் , அதிலே இரண்டு உத்தியோகத்தார்ல் மட்டுமா .??????
ReplyDeleteஅதற்குள் வேலை செய்யும் ஒருசிலர், கஷ்ட்டப்பட்டு வருகின்ற ஏழைகளிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு , பின் வழியல் முடித்துக்கொடுப்பவர்க்களுமுண்டு, அதற்குள்ளே நவீன மவ்லாவிமர்க்களுமுண்டு.....இப்படியன்வர்களால் சமூகத்திற்கே கேவலம்..
இங்கிலிசில் பதில் தந்திருக்கும் anonymous அண்ணா அவர்களே,
ReplyDeleteநீங்கள் இவ்வளவு அக்கறையாக பதில் எழுதினால், நீங்கள் கட்டார் எம்பசிக்குள் உள்ள ஒருவர் என்றல்லவா
மக்கள் தவறாக நினைத்துக் கொள்ளப் போகின்றார்கள்.
கொழும்பு மாநகர சபைதான் (CMC ) கட்டார் எம்பசிக்குள் டோய்லட் கட்ட வேண்டும் என்று நீங்கள் சொல்லுவது கொஞ்சம் ஓவர்.
எப்பொழுதாவது நீங்கள் இலங்கையில் உள்ள வங்கிகளுக்கு போனதுண்டா? அரச அலுவலகங்களுக்கு போனதுண்டா?
அங்கெல்லாம் டோய்லட்கள் உள்ளன. ஆனால் CMC கட்டிக் கொடுத்தவை அல்ல. இலங்கையில் பாடசாலைகளில் டோயலட் உள்ளது.
CMC கட்டிக் கொடுத்தவை அல்ல.தெரியாவிட்டால் நாளைக் காலை வங்கிக் கிளை
ஒன்றிற்குப் போய், அல்லது ஒரு பாடசாலை மாணவனைச் சந்தித்து கேட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
கட்டார் எம்பசியில் எதோ இரண்டு OFFICERS தான் இருப்பதாகவும், அவர்கள் இருவரும், ஓய்வு இல்லாமல், உண்ணாமல் உறங்காமல்
டீ கூட குடிக்காமல், சாரி, ஓடீ கூட இல்லாமல் வேலை செய்வதாக் சொல்கின்றீர்கள். (கட்டார் எம்பசி உள்வீட்டு சமாச்சாரம் பற்றி ரொம்பத்தான் தெரிந்து
வைத்திருக்கின்றீர்கள்)
இரண்டு பேரை மட்டும் வைத்துக் கொண்டு எம்பசியில் பஞ்சத்திட்கு பாம்பாட்ட கட்டார் என்ன பிச்சைக் கார நாடா?
உலகத்திலேயே இயற்கை எரி வாயு படிமங்கள், எண்ணெய் வளங்கள் அதிகம் உள்ள, செல்வச் செழிப்பு மிக்க நாடு.
ஒலிம்பிக்கையும், பீபா உலகக் கிண்ணத்தையும் தன் நாட்டில் நடத்திவிடத் துடிக்கும் கொளுத்த செல்வம் உள்ள நாடு.
தேவை என்றால் எம்பசியில் இன்னும் 10 , 15 பேரை நியமித்து சம்பளம் கொடுக்க முடியாதா?
நேரம் இருந்தால் அப்படியே கொஞ்சம் இந்திய எம்பசி பக்கம் போய் பார்த்துவிட்டு வாருங்கள்.
(கடவுள் கொடுத்தாலும், பூசாரி கொடுக்க மாட்டானாம் என்பது போல ஏதாவது நடக்கின்றதோ?
அநேகமான எம்பசிகளில் இது தான் கூத்து.ஸ்ரீ லங்காவில் உள்ள பிரான்ஸ் எம்பசியில் வாசலிலே ஒன்றைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள்.பிரான்ஸ் எம்பசியில் 4 மாதத்திற்கு அப்போய் மென் கேட்டதக்கு
ReplyDeleteஇந்த நிமிடம் வரை பத்தி இல்லை.இரு பதிவுத் தபால்,3
தடவை ஈமெயில் மூலம்
இலங்கை மக்களை யார் மதிக்கிறார்கள்?
ReplyDeleteஉலக நாடுகளில், இலங்கையரைப்பற்றி பலவாறு நினைக்கின்றனர்.
கிரடிட் கார்டு மோசடியில் பேர் பெற்றவர்கள்;
உலகம் முழுவதும் இன, மத பாடின்றி அகதியாக வாழும் சிறிலங்காக் கூட்டம்;
புலம் பெயர்ந்த தமிழர் 30 வருடமாக வெளிநாடுகளில் நடத்திய காவடி ஆட்டங்கள்;
சிறிலங்கா மக்கள் போகாத நாடுகளும் இல்லை, போகாத சிறைகளும் இல்லை;
சிறிலங்கா நாட்டுக்கெதிராக, அந்நாட்டு மக்களே வெளிநாடுகளில் தூதரகங்களுக்கு எதிராகவும் ஐ.நாவிற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்யும் நிலை;
சிறிலங்கா ஜனாதிபதியையே வெளிநாட்டிலிருந்து துரத்தியடிக்கும் கெட்டித்தனம்;
பெரும்பான்மையான சிறிலங்கா மக்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்கள் அல்லது சாரதிகள். ஏதோ விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள், White color jobs;
கனடா, ஐரோப்பா, அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், அனேகம்பேர் கக்கூஸ் கழுவும் தொழில் அல்லது ஹோட்டல்களில் பீங்கான், கோப்பை கழுவும் தொழிலில் பிரகாசிக்கின்றனர்; இன்னும் பலர் அரசாங்க உதவிப் பணத்திலே மினுக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இப்படிப்பட்ட குணாதிசயங்களைக்கொண்ட, நாலாந்தர வேலைகளை வெளிநாட்டில் செய்யும் நம்மை, வெளிநாட்டினர் ஈனப்பிறவிகளாக எண்ணுவது இயல்புதானே!
பஞ்சப் பரதேசியாயிருந்த இந்தியர்கள் வீசா இல்லாமல், திறந்த வீட்டில் நாய் நுழைவது போன்று நமது நாட்டிற்குப் படை எடுக்கின்றனர்.
நாம் இந்திய வீசா எடுக்கப் போனால், ஐயோ கேட்க வேண்டாம். அதுவும் யாழில் பிறந்திருந்தால், நரகத்தின் காவலர்கள் கேட்கும் கேள்வியைச் சந்திக்கலாம். சிட்டிசன் கிடைத்த நம்மவருக்கு, இன்னும் பல தலைவலிகள்.
கொரிய எம்பசிக்கு முன்னாலும், அங்கு கிடைக்கும் எடுபிடி வேலைக்காக நம்மவர்களின் அடிபிடிகள்.
சிறிலங்காப் பாஸ்போட்டோடு பயணித்தால், வெளிநாட்டு இமிக்ரேஷன்களில், நாலுக்கு மடிந்து பதில் சொல்வதும் நம்மவர்கள்தான்.
வெளிநாடுகளில் சிறிலங்கா வாசிகள் எப்படி நடந்துகொள்கிறார்கள், எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை, கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களும் ஓர் ஒத்திகை பார்க்கிறார்கள்.
மணித்தியாலக் கணக்கில் கால் கடுக்க நின்றாலென்ன, வாரக்கணக்கில் நின்றாலென்ன, மாதக்கணக்கில் நின்றாலென்ன நம்மைப் போன்ற ஈனப்பிறவிகளை கணக்கில் எடுக்கக் கூடாதென்று அவர்களுக்கும் தெரியும்.
ஏனென்றால், வீசாவிற்காக சிறிலங்கன் என்னும் ஈனப்பிறவி எதையும் செய்வான் என்பது புதுமொழி.
சிறிலங்கன் பொதுவாக வெளிநாட்டவருடன் சண்டை, தர்க்கத்தை வைத்துக்கொள்வதில்லை. ஆனால், சிறிலங்கனுக்குள்ளே மோதி வெட்டி வீழ்த்திக்கொல்லும் ஒற்றுமையை கடைப்பிடிப்பான்.