Header Ads



பேராதனை வாகன விபத்தில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் வபாத்தாகினர்

TM

பேராதனை, கெட்டம்பை சந்திக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை இரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில்  இளைஞர்கள் இருவர்   வபாத்தானதுடன், இரு இளைஞர்கள்; படுகாயமடைந்துள்ளனர்.

மாவனல்லையை சேர்ந்த எம்.இபான் (வயது 18) மற்றும் முஹமட் ரஸ்வின் (வயது 17)  என்ற  இளைஞர்களே இவ்விபத்தில் வபாத்தாகினர்.

மாவனல்லையிலிருந்து கண்டி நோக்கி வந்துகொண்டிருந்த காரொன்று எதிரே வந்த வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் வபாத்தாதானவர்களின் ஜனாஸாக்கள் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, படுகாயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

2 comments:

  1. Inna lilahi wainna illahi rajioon,may allah forgive all their sins and grand them jannathul firdous.Ameen.

    ReplyDelete
  2. உலகத்தோடு ஒப்பிடுகையில் இலங்கையில் வாகன விபத்துகள் அதிகமாகத்தான் இருக்கிறது .பாதசாரிகள் உட்பட வாகனம் ஓட்டுபவர்களும் கவனமாக இருந்தால் விபத்துகளையும் உயிராபத்துகளையும் தவிர்த்துக் கொள்ளலாம்.
    இறந்தவர்களுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்தையும் ,குடும்பத்தவர்களுக்கு மன ஆறுதலையும்,பொறுமையையும் ,நன்மைகளையும் கொடுப்பானாக.இன்னலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்.
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.