Header Ads



யாழ்ப்பாண பெண் வைத்தியருக்கு ஏற்பட்ட பரிதாப மரணம் (படங்கள் இணைப்பு)



முட்டு நோய்க்குத் தனக்குத் தானே மருத்துவம் செய்த யாழ்ப்பாண பெண் வைத்தியர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சிலாபத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி வியாபாரி மூலையைச் சேர்ந்த வைத்தியரான திருமதி பிரணவன் நீராயா வயது 27 என்ற பெண் வைத்தியரே மரணமானவராவார்.இவர் முட்டு வருத்தம் என தனக்கு தானே தொடர்ச்சியாக வைத்தியம் செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே தீடீரென்று மரணமாகியுள்ளார்.

இவர் தன்னோடு வேலை செய்த இன்னொரு தமிழ் வைத்தியரை திருமணம் செய்து 54 நாட்களே கடந்துள்ள நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவனும் மனைவியுமாக வைத்தியசாலையில் பணி புரிந்து வருகின்றனர். இவரது சடலம் தற்போது யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

No comments

Powered by Blogger.