''வேர் அறுதலின் வலி''
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பலாத்கார வெளியேற்றத்தை கவிதை வடிவில் ஆவணப்படுத்தும் நோக்குடன் யாழ் முஸ்லிம் இணையம் www.jaffnamuslim.com ''வேர் அறுதலின் வலி'' என்ற கவிதை நூலை வெளியிடவுள்ளது.
காலம் - 02-06-212 (சனிக்கிழமை) காலை 10 மணி
இடம் - முஸ்லிம் மாதர் நிலையம், இல 201 டீ.ஆர்.விஜயவர்த்தனா மாவத்த, கொழும்பு 10, (Muslim Ladies Study Circle, No. 201, D. R. Wijewardena Mawatha,Colombo 10)
தலைமை - என்.எம்.அமீன் - தலைவர் - முஸ்லிம் மீடியா போரம், முஸ்லிம் கவுன்சில், பிரதம ஆசிரியர் நவமணி
பிரதம அதீதிகள்
ரவூப் ஹக்கீம் - தலைவர் - சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நீதியமைச்சர்
றிசாத் பதியுதீன் - தலைவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், வணிகத் துறை அமைச்சர்
சிறப்பு அதீதிகள்
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா - சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர்
மாவை சேனாதிராஜா எம்.பி. - செயலாளர் - இலங்கை தமிழரசு கட்சி
கே.ஏ. பாயிஸ் புத்தளம் நகர சபைத் தலைவர்
கௌரவ அதீதிகள்
மௌலவி எம். முபாரக் - அதிபர் யாழ் ஒஸ்மானியா கல்லூரி,
எம்.எஸ். ஜலீல் - பணிப்பாளர் - யாழ் கல்வி அலுவலகம்,
சட்டத்தரணி எம்.எம். ரமீஸ் - பிரதிமேயர் - யாழ் மநகர சபை,
மௌலவி எம்.பீ.எம். சுபியான் - யாழ் மாநகர சபை உறுப்பினர்,
டாக்டர் ஹிஜாஸ் - மஹரகம தேசிய வைத்தியசாலை,
டாக்டர் ஏ.சீ.ஜனொஸ் சதாத் - அநுராதபுரம் தேசிய வைத்தியசாலை,
எம்.எம். இமாம் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
எம்.எஸ். ஜலீல் - பணிப்பாளர் - யாழ் கல்வி அலுவலகம்,
சட்டத்தரணி எம்.எம். ரமீஸ் - பிரதிமேயர் - யாழ் மநகர சபை,
மௌலவி எம்.பீ.எம். சுபியான் - யாழ் மாநகர சபை உறுப்பினர்,
டாக்டர் ஹிஜாஸ் - மஹரகம தேசிய வைத்தியசாலை,
டாக்டர் ஏ.சீ.ஜனொஸ் சதாத் - அநுராதபுரம் தேசிய வைத்தியசாலை,
எம்.எம். இமாம் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
விருதுபெறும் மூத்த இலக்கிய படைப்பாளிகள்
1. கவிமணி மௌலவி புஹாரி - காத்தான்குடி, 2. கலாபூஷணம் எஸ்.ஐ. நாஹுர்கனி - மாபோல, 3. ஏ.எல்.எம். சத்தார் - பாணந்துறை, 4. ரீ.எல். ஜவ்பர்கான் - காத்தான்குடி, 5. கவிஞர் ஜன்ஸி கபூர் - அநுராதபுரம், 6. ஏ.எஸ். இப்ராஹீம் கலைமேகம் - மூதூர், 7. கவிமணி நீலா பாலன் - வெலிமடை, 8. ஏ.எம்.எம். அலி - கிண்ணியா, 9. நவாலியூர்க் கவிராயர் - யாழ்ப்பாணம், 10. கலாபூஷனம் அப்துல் லத்தீப் - புத்தளம், 11. கலாபூஷனம் கே.எம்.ஏ. அஸீஸ் - சாய்ந்தமருது
சிறப்பு விருது பெறும் மூத்த படைப்பாளிகள்
1. கலாபூஷணம் கவிஞர் யாழ் அஸீம் 2. கலைவாதி கலீல் 3. முல்லை முஸ்ரிபா
முதற் பிரதி - புரவலர் ஹாசிம் உமர்
சிறப்பு பிரதி - சமூக சேவையாளர் எச்.எச்.எம். நியாஸ்
நிகழ்ச்சித் தொகுப்பு - கவிஞர் கிண்ணியா அமீர் அலி (கவிதைச்சரம் - இலங்கை முஸ்லிம் சேவை)
முக்கிய குறிப்பு - இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைப்பிதழ் கிடைக்காதவர்களும் கலந்துகொள்ள முடியும்.
தொடர்புகளுக்கு
jaffnamuslim1990@yahoo.com
0717268466,
0112671596.
தொடர்புகளுக்கு
jaffnamuslim1990@yahoo.com
0717268466,
0112671596.
அன்புடன் அழைக்கிறோம்..!
உணர்வுடன் வாரீர்..!!
ஆதரவு தாரீர்...!!!

Wish you all the best.
ReplyDeleteDaoud Tharik
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் இந்த புத்தக வெளியீடு ஒரு மைற்கல். கிழக்கு முஸ்லிம்களுக்கு புலிகள் இழைத்த அநீதிகள் ''மீஸான் கட்டைகளில் மீளஎழும் பாடல்கள்'' என்ற கவிதை நூலில் உள்வாங்கப்பட்டுள்ளது. எனினும் வடக்கு முஸ்லிம்களுக்கு புலிகள் இழைத்த அக்கிரமங்கள் இதுகாலவரையும் நூலுருவாக்கப்படவில்லை. அந்தக்குறைய யாழ் முஸ்லிம் இணையம் வெளியிடவுள்ள ''வேர் அறுதலின் வலி'' இல்லாமல் போக்கும் என்று நம்புகிறேன்!
ReplyDeleteஎம். இஸ்மாயில்
மன்னார்.
இலண்டன் வாழ் யாழ்ப்பாண முஸ்லிம்கள்
ReplyDeleteயாழ்ப்பாண முஸ்லிம்களின் குரலாக மாத்திரம் இல்லாது முழு முஸ்லிம் சமூகத்தினதும் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் யாழ் முஸ்லிம் இணையத்தில் இந்த புத்தக வெளியீட்டு விழா வெற்றியடைய பிரார்த்திப்பதுடன் எமது வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம். லண்டனினும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் வாழும் நிலையில் அவர்களுக்கு இந்த புத்தகம் கிடைக்க யாழ் முஸ்லிம் இணையம் ஏற்பாடு செய்யவேண்டும்.
கடந்தகாலத்தில் நமது சமூகம் எதிர்கொண்ட துயரங்களை ஆவணப்படுத்தும் உங்கள் நோக்கம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.........
ReplyDeleteஅமீர் ஹுசைன்
அம்பாறை
ஆதம் லெப்பை
ReplyDeleteசென்னை
தமிழ்நாடு
இந்த நூல் வெளியீட்டு விழா வெற்றிபெற வாழ்த்துக்கள்..!
ஆமீனா
ReplyDeleteகண்டி பதியுதீன் மஹ்மூத் கல்லூரி
நல்லது செய்தால் பயன்கிட்டும். நல்லதுசெய்யும் உங்களுக்கும் பயன்கிட்ட வாழ்த்துக்கள்..!
யாழ்ப்பாண முஸ்லிம்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்ததை இதுகாலவரையும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் வரலாறாக எழுதவில்லை. யாழ்பாண முஸ்லிம் அமைப்புக்கள் இதுவிடயத்தில் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். இப்போதாவது இதுபற்றிய விழிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. இந்த பணியை மேற்கொண்டுள்ள யாழ் முஸ்லிம் வெப்சைட்டுக்கு யாழ்ப்பாண முஸ்லிம்கள் நன்றி சொல்லவேண்டும்.
ReplyDeleteயாழ் முஸ்லிம் வெப்சைட் பக்கச்சார்பின்றி செயற்படுவது போன்று , இந்த புத்தக வெளியிட்டு விழாவுக்கும் எல்லோரையும் பக்கச்சார்பின்றி அழைத்திருப்பது வரவேற்கப்படவேண்டியது. வெறுமனே செய்திகளை மாத்திரம் போட்டுக்கொண்டிருக்காமல் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தை வழிநடாத்தவும் யாழ் முஸ்லிம் வெப்சைட் முன்வரவேண்டும். அதற்கான தகுதி யாழ் முஸ்லிம் வெப்சைட் ஊடகத்திடம் உள்ளது. எல்லாம் நல்லபடி நடக்க அல்லாவிடம் துஆ கேட்கிறோம்.
Muhammathu Isathik
Morrstreet
jaffna
thodarattum ungal payanam............
ReplyDeleteஅல்லாஹ் உங்கள் காரியங்களை இலகுவாக்கி வைப்பானாக. நான் அறிந்தவரை யாழ் முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பின் சில விடயங்கள் அப்துல் ரஹீம் இன் யாழ் முஸ்லிம்களின் வரலாறு இரண்டாம் பதிப்பில் ஓரளவு உள்வாங்கப்பட்டுள்ளது. மேலும் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் வடக்கு முஸ்லிம்களின் இனச் சுதிகரிப்பினை பற்றிய விடயங்களை பிரதேச வரியாக ஆவணப்படுத்தி வெளியிட்டு வந்தார். இந்நூல்களின் உருவாக்கங்களில் அவரது மாணவர்கள் என்ற வகைகளில் நாமும் மிகச் சிறிய பங்களிப்புகளை செய்தோம். துரதிஸ்டவசமாக யாழ்ப்பான முஸ்லிம்களை பற்றிய நூல் மட்டும் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்களினால் எழுதப்பட்டும் நூல் உருப்பெறவில்லை. அன்புடன்
ReplyDeleteநவாஸ்டீன்
"வேர் அறுதலின் வலி" இந்த நிமிடம் வரை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.புத்தக வெளியீட்டு விழா அன்றே ஆசிய ,மத்திய கிழக்கு நாடுகளிலும் அமெரிக்க ஐரோப்பிய,கண்டங்களிலும் கிடைப்பதற்கு முயற்சி செய்தால் நல்லதென்பது
ReplyDeleteஎன் அபிப்பிராயம்.அல்லாஹ் நாடினால் முயற்சி செய்து பாருங்களேன் .ஜசக்கல்லாஹ் ஹைர் .
Meraan
Mareein - SWEDEN
ReplyDeleteவேர் அறுதலின் வலி கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.