முஸ்லிம் ஊடகவியலாளரை தாக்கிய முஸ்லிம் அரசியல்வாதி
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவரால் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் அமைச்சர் பந்துல குணவர்த்தன கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் கிழக்கு மாகாணசபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் கே.எம்.ஏ. றஸாக் (ஜவாத்) என்பவர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் என்பவரைத் தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, இன்று திங்கட்கிழமை பிற்பகல் மேற்படி கூட்டம் நடைபெற்றபோது செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் அறூஸை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பின்னால் அழைத்துச் சென்று அவரைத் தாக்கியுள்ளார். அத்துடன் செல்போன், கமெரா போன்றவற்றையும் பறித்துள்ளார்.
ஏற்கனவே கிழக்கு மாகாணசபை உறுபினர் குறித்து எழுத்தப்பட்ட செய்திகளினால் ஆத்திரமடைந்தே இவரைத் தாக்கியுள்ளதாக அப்பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். தாக்கப்பட்ட ஊடகவியலாளர் தற்போது அட்டாளைச்சேனை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இவ்வாறான தாக்குதல்கள்தான் ஊடகங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றன.

Post a Comment