இலங்கையில் இஸ்ரேல்..! வரமா..? சாபமா..??
இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் ஒன்றை திறக்க அனுமதியளிக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த கோரிக்கை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன தலைவர்கள் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சந்தர்ப்பத்தில், இஸ்ரேல் தூதரகத்தை திறக்க அனுமதிக்க வேண்டாம் என கோரிக்கை விடுப்பது தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தும் என அரசாங்கத்தின் உயர் மட்டத் தரப்புகள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல், இலங்கையை சேர்ந்த பயிற்சி பெற்ற மற்றும் பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க இணங்கியுள்ளது. இதனை தவிர அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த, இஸ்ரேல் தூதுக்குழுவினர் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

Post a Comment