கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா..?
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக அரசாங்கத்திற்கு மிகவும் நெருக்கமான பிரதியமைச்சர் ஒருவர் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த பிரதியமைச்சர் மேலும் தகவல் தருகையில்,
நாட்டு நிலைமைகள், மற்றும் கிழக்கு மாகாண நிலவரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு தற்போது சாதகமற்ற நிலைமை காணப்படுவதாக ஊகிக்கப்படுகிறது. எகவே கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் காணப்படுகிறது என்றார்.
அரசாங்கத்திற்கு சாதகமற்ற நிலை காணப்படுவதாக கூறுகிறீர்களே அதனை விளக்க முடியுமா என அந்த பிரதியமைச்சரிடம் யாழ் முஸ்லிம் இணையம் வினா தொடுத்தபோது, இல்லை நான் விளக்கிக்கூற தயாரில்லை. இருந்தபோதும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் நிலவுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment