Header Ads



எந்தவித இனவாத சக்திகளும் தலைதூக்க நாம் இடமளிக்க மாட்டோம் - மஹிந்த சொல்கிறார்

தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய சாதி, மத, பிரதேச பேதங்களை ஏற்படுத்தும் செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வேண்டுகோள் விடுத்தார். அலரி மாளிகையில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

இந்த சந்திப்பில், இலங்கையின் அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். பரஸ்பர நம்பிக்கையையும் நட்புறவையும் மக்களிடையே ஏற்படுத்தக்கூடிய செய்திகளை வெளியிடுவது மிகவும் அவசியமென்று ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

விசேடமாக பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கொள்ளும் வன்முறைகள் பற்றிய படங்களுடனான சிறிய செய்திகளை கூட பெரிதுபடுத்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டுமென்றும், இவ்விதம் செய்வது பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்களின் வன்முறைகளுக்கு மதிப்பளிக்கக்கூடியதாக அமையலாம் என்று ஜனாதிபதி மேலும் சுட்டிக் காட்டினார்.

“சிங்களவர்களாக இருந்தாலும் தமிழர்கள் அல்லது முஸ்லிம்களாக இருந்தாலும் அனைத்துவிதமான இனவாதத்தையும் நாம் நிராகரிக்கிறோம். இலங்கையில் எந்தவித இனவாத சக்திகளும் தலைதூக்க நாம் இடமளிக்க மாட்டோம்” என ஜனாதிபதி கூறினார்.

இலங்கையின் முன்னேற்றத்தையும் அதன் நல்லிணக்க நடவடிக்கைகளையும் இனவாதம் சீர்குலைத்துவிடுவதன் காரணமாக வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகள், பத்திரிகைகள் ஆகியவற்றின் ஊடாக எந்தவிதத்திலும் இனவாத ஆக்கக்கூறுகள் தலைதூக்க இடமளிக்க வேண்டாமென அனைத்து ஊடக தலைவர்களையும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

இலங்கையிலிருந்து பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் இலங்கை வாழ் மக்கள் அனைவரும் சமாதானமாகவும், ஐக்கியமாகவும் வாழ்வதையே தான் பார்க்க விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

4 comments:

  1. தம்புள்ளையில் நடப்பது விளையாட்டா ?தலைவர் எதை இனவாதமென்கிறார்?
    Meeraan

    ReplyDelete
  2. நல்லா சொன்னீங்க சேர்,

    தம்புள்ளைல காவி அணிந்த சிங்கள பவ்த்த இனவாதம் தலை தூக்கிச்சே,
    அதே மாதிரி ரங்கிரி எப் எம் வானொலியும், பத்திரிகையும் இனவாத ஆக்கக் கூறுகளை
    கக்கிச்சே, அதே மாதிரி மன்னார்ல வெள்ளை நீண்ட அங்கி அணிந்த கிறிஸ்தவ
    புலிவாதம் தலை தூக்குதே, கொஞ்சம் கவனிங்க......

    ReplyDelete
  3. தலைக்கு இன வாதம் என்ரால் என்னவென்று தெரியாது போல
    யாழ் குருவி

    ReplyDelete
  4. .காவி உடுத்தியவர்களும்,சகல இன மத வெறியர்களும்,கவுன் உடுத்திய பாவாடை பாதிரிகளும் சொல்வது ,செய்வது இனவாதமில்லையா?
    மற்றவர்கள் செய்யக்கூடாது ,ஒட்டுமொத்த குத்தகை எங்களது என்று சொல்ல வருகிறீர்களா? சரித்திரங்களை தவறாக எழுதி வைத்திருப்பதையும்
    இன வெறியை தூண்டும் விஜயன் குவேனி சினிமாவை தடை செய்யலாமே .அதிகாரமும் ,ஆணவமும் நிலைத்ததாக சரித்திரமில்லை .உலகம்
    உருண்டை என்பதை மறந்து தலை கால்தெரியாமல் வாழ்ந்தவர்கள் எங்கே போனார்கள் என்பதை கண் முன் பார்த்துமா திருந்தவில்லை .
    இலங்கையில் யுரேனியம் இருப்பதாக ஒரு தகவல்,அதுதான் இஸ்ரவேல் மோப்பம் பிடித்து வந்திருக்கிறது .அல்லது நாயை சந்திரனுக்கு
    அனுப்பியதுபோல் அமெரிக்காதான் யூத கைக்கூலிகளை அனுப்பியதோ தெரியவில்லை .அது உண்மையாக இருக்குமானால்,உங்கள் நாட்கள்
    அமெரிக்காவினால் எண்ணப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் .
    Meeraan.

    ReplyDelete

Powered by Blogger.