Header Ads



கோதபாயாவின் தன் நம்பிக்கையே யுத்த வெற்றியின் இரகசியம்



யுத்தத்தின் போது பாதுகாப்புச் செயலாளர் கோதபாயவின் சேவை அளப்பரியது என சர்வதேச நிதியியல் ஒத்துழைப்பு அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். யுத்தத்தின் தன்மையை மாற்றியமைத்த பெருமை கோதபாவைச் சாரும் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

கோதபாயவின் அசைக்க முடியாத தன் நம்பிக்கையே யுத்த வெற்றியின் இரகசியம் என அவர் தெரிவித்துள்ளார். தந்திரோபயங்களுடன் கூடிய கோதபாயவின் யுத்த முன்நகர்வுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கியதாகக் குறப்பிட்டுள்ளார்.

கோதபாய ராஜபக்ஷ படைவீரர்களின் படைவீரர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கோதவின் யுத்தம் என்ற தலைப்பில் வெளியான நூல் பிரசூர வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடைநிலை படைவீரர் முதல் உயர் படையதிகாரிகள் வரையில் அனைவரினதும் மனங்களில் யுத்த வெற்றி குறித்த நம்பிக்கையை கோதபாய ராஜபக்ஷ ஏற்படுத்திக்கொடுத்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. சரத் பொன்சேகா என்று யாரோ ஒருவர் இருந்ததாக ஒரு சின்ன ஞாபகம்,
    அவர் பற்றி ஏதாவது இந்தப் புத்தகத்தில் இருக்கின்றதா?

    ReplyDelete
  2. இவரும் இவரின் தன்னம்பிக்கையும்!

    உலக நாடுகள் ஆயுதம் மட்டும் அளிக்காதிருந்தால், இவரின் தன்னம்பிக்கை யாருக்கும் பயன் அளித்திருக்காது!

    ReplyDelete

Powered by Blogger.