Header Ads



முஸ்லிம்கள் அச்சம்கொள்ள தேவையில்லை - கோத்தபாய ராஜபக்ஷ தெரிவிப்பு

இர்ஷாத் றஹ்மத்துல்லா

தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மத்ரஸா தொடர்பில் சில  பெரும்பான்மை சமூகத்தினர் ஆரம்பித்துள்ள அத்துமீறல் சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கவனத்திற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்  கொண்டுவந்துள்ளார்.

தற்போது  முஸ்லிம்களின் மத வழிபாட்டு தளங்கள் மீதான தாக்குதல் சம்பவம் அதிகரித்துவருவதாகவும் இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயலென்றும்,இது குறித்து உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் எ்ன்று அமைச்சர் றிசாத் பதியுதீன்,பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோறிய போது,முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையென்றும் இது குறித்து உரிய விசாரணைக்ள் ஆரம்பிக்கப்படும் என்ற உறுதியினையும் தம்மிடம் வழங்கியுள்ளதாக அமைச்சர றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

தம்புள்ள பள்ளிவாசல் மற்றும் குருநாகலயில்,தற்போது தெஹிவளையில் என முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்,மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களின் பின்னணயில் குறிப்பிட்ட சில பௌத்த மத குருக்கல் இருப்பதாகவும்,இவ்வி்டயத்தில் சட்ட நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என்றும் தாம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் வலியுறுத்தி தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

அதே வேளை தெஹிவளை மேயருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் றிசாத்  இவ்விடயம் குறித்து நீண்டநேரம் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.
அதே நிலையில் இன்று(2012-05-27) ஆம் திகதி இது குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளதாகவும்,சகல சமூகங்களினதும் மத உரிமை பாதுக்கப்படும் என்று தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

பள்ளிவாசல் மீது அடாவடித்தனம் செய்ய வந்த பௌத்த மத குருக்களை வெள்ளிக்கிழமை மாலை பொலீஸார் விரட்டியதுடன்,பள்ளிவாசலின் பாதுகாப்புக்காக பெரும் எண்ணிக்கையிலான பாதுகாப்பு அதிகாரிகள் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. பள்ளிவாசல் மீது அடாவடித்தனம் செய்ய வந்தவர்களை விரட்டுவார்கள். வெசாக் பந்தல் ஓலையை கடித்த மாட்டுக்காரச் சிறுவனைச் சுடுவார்கள்!

    ReplyDelete
  2. nalla podiyan27/05/2012, 05:55

    போற போக்கில் பள்ளிவாசல் கோவில்கள் எல்லாம் உடைத்து பன்சலை மட்டும் மிஞ்சும் போல இருக்கிறது.இந்த மஞ்சள் உடுப்பு போடும் ஆட்களுக்கு வேறு ஒன்றும் வேல்லை இல்லை போல,திண்டு திண்டு சும்மா கொழுப்பை நிரப்பி வைத்து இருகிறாங்கள்.பெரிய உடம்பு வைத்து கொண்டு பொண்டாட்டி புள்ளைகள் பெத்து நல்ல வாழ வேண்டியது தானே.சும்மா பொய் வேலைகள் செய்து கொன்டு இருகிரங்கள்.

    ReplyDelete
  3. Allah irika bayam ehn porumayalargalhudan allah irippan

    ReplyDelete
  4. நாட்டில் என்ன நடக்கிறது என்று பாதுகாப்போடு சம்பந்தப்பட்டவர்களுக்கு அமைச்சர் தொலை பேசியில் கதைத்தபிறகு தான் அறிக்கை விட வேண்டுமென்ற அக்கறையே வருகிறது.முஸ்லீம்களுக்கு தேவை அறிக்கையல்ல,
    உடனடி முடிவு.வழக்குகள் போட்டு நேர காலங்களை வீ னடிக்கத் தேவையில்லை.சகல இன மக்களுக்கும்
    மத வழிபாட்டில் ஒரே உரிமைதான் இருக்கிறேதென்ற
    சாதாரண அறிவு கூட ஆள்பவர்களுக்கும்,மத குருமார்களுக்கும் தெரியாமலிருப்பது விந்தையாக
    இல்லையா?
    Meraan

    ReplyDelete
  5. சம்பந்த பட்டவர்களை கைதி செய்யாத தேஹிவளை போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

    ReplyDelete
  6. The story,screen play,dialogue,lyrics,music and direction all GOTHABAYA RAJAPAXA.and the bikku (mungs)and muslim MPs are actors.so v have to believe your statement....? please do it valuable thinks. this is ISLAM AND ALMIGHTY ALLAH.CAN NOT CHEAT HIM.

    ReplyDelete
  7. mahir paris1628/05/2012, 10:01

    மகிந்த ராஜபக்ச உறுதி அளித்தார் கோத்தபாய உறுதி அளித்தார் என்று முஸ்லிம் அமைச்சர்கள்தான் அறிக்கைகளை விடுகிறார்களே ஒழிய பொறுப்பு வாய்ந்த இந்த இருவரும் அல்லது ஒருவரேனும் தம்புள்ள தொடக்கம் தெஹிவளை வரை நடந்த சம்பவங்களுக்காக பத்திரிகையலர்களை கூட்டி ஒரு அறிக்கையினை அல்லது இப்படிப்பட்ட இனதுவேசக்கர்ர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்ததாக காணோம் அது முஸ்லிம் அமைச்சர் மார்களுக்கு புரியவில்லையா அல்லது புரிந்தும் புரியாததுபோல் இருக்கிறார்களா அனால் ஒன்று மட்டும் லேசாக முஸ்லிகளுக்கு புரிகிறது அடுத்தது முஸ்லிம்கள்தான்

    ReplyDelete

Powered by Blogger.