மக்காவுக்கு நேராக சூரியன் வருகிறது - கிப்லாவை அறிந்துகொள்ள அரிய வாய்ப்பு
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிறைக் குழுவின் செயலாளர் அஷ்ஷேக் ஏ.எம்.ஏ. அஸீஸ் மிஸ்பாஹி விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடத்தில் 2 தடவைகள் சூரியன் மக்காவுக்கு நேராக உச்சம் கொடுக்கிறது. அவை மே 28 அல்லது 29 மற்றும் ஜுலை 16 அல்லது 17 ஆகிய தினங்களாகும்.
இவ்வருடம் மே 28 ஆம் திகதி கொழும்பு நேரப்படி பிற்பகல் 2இ48 மணிக்கு மக்காவுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும். அன்றைய தினம் குறித்த அந்நேரத்தில் நெடுங்குத்தாக உள்ள ஒரு பொருளுக்கு ஏற்படும் நிழலினூடாக சூரியனை முன்னோக்குவது சரியான கவ்பாவை முன்னோக்குவதாக அமையும்.
ஆகவே சரியான கிப்லாவை அறிந்து கொள்வதற்கு நேரகாலத்துடன் நேர்த்தியான ஒரு தடியை 90 பாகையில் (அதாவது பூமிக்கும் அந்தத் தடிக்குமிடையிலான கோணம் செங்கோணமாக இருக்கும் விதத்தில்) நாட்டுவதுடன் அந்த நேரத்திற்கு சற்று முன்பதாக பிரயோகிக்கும் கடிகாரத்தின் நேரத்தையும் சரிசெய்துகொள்ள வேண்டும்.
பின்னர் குறித்த நேரத்தில் சூரியனின் மூலம் அந்தத் தடிக்கு ஏற்படும் நிழலின் மீது கோடிட்டு கொள்ளவேண்டும். பிறகு கோட்டினூடாக தடியை நோக்கும் திசையையே கிப்லாவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

Post a Comment