அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டுசேர்ந்தாலும் முதலமைச்சர் பதவி கோர எந்த தகுதியுமில்லை
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டாலும் முதலமைச்சர் பதவியினை கோருவதற்கான எந்தவித தகுதியுமில்லை என பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கூறினார். கிழக்கு மாகாண சபை தேர்தலில் எமது கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்தே போட்டியிடும் என அவர் குறிப்பிட்டார்.
கடந்த கிழக்கு மாகண சபை தேர்தலிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்தே எமது கட்சி போட்டியிட்டமையினால் இம்முறை முதமைச்சர் பதவியினை எமது கட்சிக்கே வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டாலும் முதலமைச்சர் பதவியினை கோருவதற்கான எந்தவித தகுதியுமில்லை என அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் இணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதா என வினவியதற்கு, 'தற்போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளிகளாகவே அனைத்து முஸ்லிம் கட்சிகளும் உள்ளன' என பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
இதனால் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து போட்டியிடுவதன் மூலம் முஸ்லிம் முதலமைச்சரை கைப்பற்ற முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Mr.Munafiq,First of all you don't have any qualification to talk about or on behalf of Muslims
ReplyDeleteஐந்து சதத்திற்கும் பிரயோசனம் இல்லாதவர்தான் பிள்ளையான்.
ReplyDeleteஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ், ரவூப் ரகீம் போன்ற தான் தோன்றித் தலைவர்களுக்கு பின்னால் யாரும் போகாமல், முஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்து சிங்களவர் ஒருவரை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதே இன்றைய முஸ்லிம்களின் தேவை. .
முஸ்லிம் முதலமைச்சர் என்பது பகற்கனவு.
சூரியன் மேற்கில் உதித்தாலும், நமது முஸ்லிம் கூட்டங்கள் ஒற்றுமைப்படாது.
ஒற்றுமைப்படாத முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.
Because of you only last time we loose our Muslim Chief Minister. Please dont talk about it.
ReplyDelete