எமது அறிவித்தல்...!
யாழ் முஸ்லிம் இணையத்தில் பிரசுரமாகியிருந்த சகோதரர் ஜினூஸ் (யாழ் கிராம சேவகர்), சகோதரர் ஜான்ஸின் (கணக்காளர்) ஆகியோருடைய புகைப்படங்களை சிலர் எமது அனுமதியை பெற்றுக்கொள்ளாது முறையில் பயன்படுத்தியிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது.
யாழ் முஸ்லிம் இணையத்தில் பதிவு செய்யப்படும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை எவரும் பிரதி செய்யாதபடி நாம் ஏற்பாடுகளை செய்துள்ள போதிலும், நவீன தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி சிலர் ஜினூஸ், ஜான்ஸின் ஆகியோருடைய புகைப்படங்களை பிரதிசெய்துள்ளதுடன், அவற்றை தமது தேவைக்கும் பயன்படுத்தியுமுள்ளனர். இதுவிடயத்தில் பாதிக்கப்பட்ட அவர்கள் இருவரும் யாழ் முஸ்லிம் இணையத்திடம் முறைப்பட்டிருந்தனர். வாசகர் உரிமை என்ற அடிப்படையில் நாம் இங்கு அதனை பதிவிடவும் நேர்ந்துள்ளது.
யாழ் முஸ்லிம் இணையத்தில் பிரசுரமாகியிருந்த அந்த புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டமைக்காகவும், அதற்காக ஏற்பட்ட சங்கடங்களுக்காகவும் நாம் சம்பந்தப்பட்டவர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறோம்.
சிறந்த ஊடக நெறிகளை பின்பற்றி நேர்மையுடனும், நடுநிலையுடனும் முஸ்லிம் சமூகத்திற்கான தமது சேவையை தொடரும் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு தயவுசெய்து ஆதரவு தாருங்கள். மையத்து வீடுகளுக்குச் சென்று, யாழ் முஸ்லிம் இணையத்திற்கு எதிராக சேறுபூசும் முற்றிலும் ஆதாரமற்ற சோடிக்கப்பட்ட, கீழ்த்தரமான நடவடிக்கைகளை நிறுத்துங்கள்.
அதேவேளை எமது உறவுகளுக்குடன் நாம் முக்கிய விடயமொன்றை கூறவிரும்புகிறோம். ''யாழ் முஸ்லிம்'', ''ஒஸ்மானியா நண்பர்கள்'' ஆகிய இரண்டு பேஸ்புக்குகளுமே எம்மால் இயக்கப்படுகிறது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்..!
மன்னிப்பு கேட்பதால் நாம் தாழ்ந்து விடப்போவதில்லை.மன்னிப்பு கேட்கும் நாம் எப்போதும் அல்லாஹ்விடத்தில் உயர்ந்த நிலையில் இருப்போம்.
ReplyDeleteMeraan
செய்திகளுடன் சம்மந்தப்பட்ட படங்கள், சம்மந்தப்பட்டவர்களுடைய புகைப்படங்களைப் பிரசுரிப்பது
ReplyDeleteபொதுவான ஊடக நடைமுறையாகும். யாழ் முஸ்லிமின் செயல்பாட்டை குறை சொல்ல முடியாது.
நவீன தொழில் நுட்பங்கள் முன்னேறியுள்ள இக்காலத்தில் நாட்டின் ஜனாதிபதியின் புகைப்படங்களையே
கோரமாக்குகின்றார்கள். ஆகவே, ஊடாகத்தை குறை கூறுவது தவறு. சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்களால் அறியப்பட்டவர்களுடைய புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியகுவது வழமையாகும்.
யாழ் முஸ்லிம் குறித்து எதிர்க் கருத்துக்கள், விமர்சனங்கள் இருந்தால், அவற்றை யாழ் முஸ்லிமுக்கு நேரடியாக
தெரியப் படுத்துவதே பண்பாகும். எமக்கென்று இருக்கும் ஒரே ஒரு ஊடகத்தையும் இல்லாமலாக்கி விடாதீர்கள்.