Header Ads



புஷ் அப்பாவிகளை சித்திரவதை செய்தார் - ஒபாமா கூட்டுப் படுகொலை செய்கிறார்

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் w புஷ் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார் பிரபல அமெரிக்க சிந்தனையாளரும், எழுத்தாளருமான நோம் சோம்ஸ்கி.

ஆஃப்கானிஸ்தானிலும், யெமனிலும் அமெரிக்க ட்ரோன்(ஆளில்லா விமானம்) தாக்குதல்களை கடுமையாக கண்டித்த சோம்ஸ்கி, புஷ் அரசு நிரபராதிகளை சித்திரவதைச் செய்து கடத்திய பொழுது, ஒபாமா மக்களை கொன்றொழித்து வருகிறார் என குற்றம் சாட்டுகிறார்.

புஷ்ஷிற்கு எவரையேனும் பிடிக்கவில்லை என்றால் கடத்திச்சென்று சிறைக்கூடங்களில் வைத்து சித்திரவதைச் செய்வார். ஒபாமாவோ, ஆட்களை கொலைச் செய்வதால் சிறைக்கூடங்களுக்கு தேவையில்லை. என்று சோம்ஸ்கி ஒரு நேர்முகத்தில் கோபத்துடன் கூறினார்.

அமெரிக்க அறிஞர் அன்வர் அல் அவ்லாகியின் யெமனில் வைத்து கொலைச் செய்ததை சோம்ஸ்கி வன்மையாக கண்டித்தார். யெமனில் அல்காயிதாவின் நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவ்லாகியை கொலைச் செய்தது தவறு என கூறிய சோம்ஸ்கி, இச்செய்தியை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட ரீதியையும் கண்டித்தார்.

3 comments:

  1. ஆக மொத்தில இரண்டு பேரும் அப்பாவிகள்

    ReplyDelete
  2. நரக வாசிகள்.

    ReplyDelete
  3. மனசாட்சி உள்ள ஒரு சில நல்லவர்களால் தான் அல்லாஹ் உலகை அழிக்காமல் குறிப்பிட்ட தவணை வரை
    விட்டு வைத்திருக்கிறான்.புஷ்,கிளிண்டன் ,ஒபாமா இன்னும் எந்த தலைவர்களின் உத்தரவுப்படி அப்பாவி மக்களை
    கொன்று குவித்தார்களோ, அத்தனை பேரினதும் சாபம் ,முனிவு இவர்களுக்குரிய தண்டனையை அல்லாஹ்விடம்
    இருந்து பெற்றுக் கொடுக்கும் .நீதி செலுத்துவதில் அல்லாஹ் நீதியாளன்.இவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல்
    எங்கேயுமே போக முடியாமல் இருப்பதே இந்த அப்பாவிகளுக்குரிய தண்டனையாகக் கூட இருக்கலாம் .
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.