நிர்வாக சேவை பரீட்சைக்கு தோற்றிய 18.000 பேரில் முஸ்லிம்கள் எவரும் தெரிவாகவில்லை
இலங்கை கல்வி நிர்வாக சேவை மூன்றாம் வகுப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு இம்முறை 18.000 பேர் தோற்றியிருந்த போதும் இவர்களின் முஸ்லிம்கள் எவரும் தெரிவாகவில்லையென கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களில் 78 பேர்களின் பெயர்ப் பட்டியல் பரீட்சை ஆணையாளரால் கல்விச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர்களில் 6 தமிழர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும், முஸ்லிம்கள் எவரும் இரண்டாவது பரீட்சையில் தகைமை பெறாமையால் தெரிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாவது பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்ட 173 பேரில் 2 முஸ்லிம்களின் பெயர்கள் இருந்துள்ளன.
கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி நடைபெற்ற 2 ஆம் பிரிவு பரீட்சையில் கட்டுரைப்பாட வினாத்தாளில் 40 புள்ளிகள் பெறாமையே இவர்கள் தெரிவு செய்யப்படாமைக்கான காரணமாக கூறப்படுகிறது.
இப்போட்டிப் பரீட்சையில் மொத்தமாக 269 புள்ளிகளைப் பெற்று கே. அபிராமி என்பவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment