Header Ads



இலங்கை தேசிய றக்பி வீரர் வசிம் தஜூடின் அகால மரணம் - ஜனாஸா இன்று நல்லடக்கம்

இலங்கை தேசிய றக்பி அணி மற்றும் ஹெவ்லொக்ஸ் அணி ஆகியவற்றின் வீரரான வசிம் தஜூடின், நாரஹேன்பிட்டியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை இரண்டு மணியளவில் வசிம் தஜூடின் விபத்துக்குள்ளாகியுள்ளார். தஜூடின் பயணித்த வாகனம் சுவரொன்றில் மோதிய பின்னர் தீப்பற்றியமையினால், அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரியில் கல்வி கற்ற வசீம், 2003 ஆம் ஆண்டு பாடசாலை றக்பி அணியின் உப தலைவராகவும் செயற்பட்டுள்ளார். கனிஷ்ட தேசிய றக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், 2007 ஆம் ஆண்டு இலங்கை தேசிய றக்பி அணியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார்.

வசீம் தஜூடின் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹொங்கொங் றக்பி தொடரில் எழுவர் கொண்ட இலங்கை றக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு ஹெவ்லொக்ஸ் அணியை தலைமை தாங்கிய வசீம் தஜூடின் அந்த வருடத்திற்கான பிரபல றக்பி வீரராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

20 வயதான வசீம் தஜூடின் ஜனாசா நல்லடக்கம் இன்று நடைபெறவுள்ளது.

1 comment:

  1. Inna lilahi waina ilaihi rajioon,may Allah forgive him and grand him jannathul firdous.Ameen.

    ReplyDelete

Powered by Blogger.