Header Ads



வடக்கு முஸ்லிம்களின் அவலம் கண்டு வேதனைப்பட்ட பாகிஸ்தான் தூதுவர் (படங்கள் இணைப்பு)

இர்ஷாத் றஹ்மத்துல்லா

வடக்கில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களது நிலை குறித்து இலங்கை ஜனாதிபதி மற்றும் தூதுவர்களின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சீமா எலாஹி பலூஜி தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் வவுனியா சாளம்பை குளம்,தலைமன்னார்,மற்றும் முசலி பிரதேச செயலகப் பிரிகளில் உள்ள கிராமங்ளுக்கு விஜயம் செய்து மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியதன் பின்னர் இடம் பெற்ற கூட்டத்தின போது மேற்கண்டவாறு கூறினார். பாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், வடமாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர்களான மொஹிதீன்,லியாவுதீன்,உட்பட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

மேலும் உயர் ஸ்தானிகர் பேசுகையில் கூறியதாவது,

நான் இங்கு வருகைத்தந்து மீள்குடியேறியுள்ள மக்களது பிரச்சினைகளை தேவைகளை நேரில் பாரக்க முடிந்தது.மிகவம் கடினமான ஒரு அகதி வாழ்க்கையினை நீங்கள் வழ்கின்றீர்கள் என்பதை அறிய முடிகின்றது.உங்களது தேவைகள்,எதிர்பார்ப்புக்கள் குறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் எனக்கு தெளிவாக விளக்கப்படுத்தியுள்ளார்.

மன உலைச்சலுக்குள்ளாகி இருக்கும் உங்களது வாழ்வு விமோசனம் பெற பிரார்த்தனைகளை செய்வோம்.அதே போல் கொழும்புக்கு சென்றதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,பொருளாதார அபிவிருத்தி அமைச்சர பஷில் ராஜபக்ஷ மற்றும் இலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள்,மற்றும் உயர் ஸ்தானிகர்கள் ஆகியோரை சந்தித்து உங்களது தேவைகள் குறித்து விளக்கமளித்து உதவிகளை பெற்றுத் தர முயற்சிகளை செய்யவுள்ளேன்.
நீங்கள் பெற்றுள்ள அமைச்சர றிசாத் பதியுதீன் மக்கள் பணியினை  செய்யக் கூடிய தைரியம் கொண்டவர.நீங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை அதனை செய்ய கூடியவர் என்றும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.






4 comments:

  1. எமது அவலங்கள் ஜனாதிபதிக்கு ஒருபோதும் தெரியாது.

    அவரின் முழு நேர வேலையும், ஜெனீவாவின் போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்புவதுதான்.

    ReplyDelete
  2. வடக்கு முஸ்லீம்களின் அவலத்தை பார்த்து கலங்கும் உங்களைப் பார்த்தால் எங்கள் கண்கள் குளமாகிறது .கழுத்தில் சுத்தியிருக்கும் துண்டை எடுத்து தலையில் போட்டு
    எங்களை போன்றவர்களை சந்தோசப்படுத்தியிருக்கலாம்.முஸ்லீம் நாட்டிலிருந்து வந்தவரா நீங்கள் என்று நம்ப முடியாமல் இருக்கிறது.நீங்கள் எங்கள் தலைவரிடம்
    போய் சொல்லி அவரின் நேரத்தை பாழடிக்க வேண்ட்டம் .அவருக்கு ஞானக் கண் கொண்டு எல்லாம் அறிந்து கொண்டுதான் பயந்து போய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .
    Meraan

    ReplyDelete
  3. பாருங்க சகோ நம்ம நிலமையை. தமிழன் ஜெனீவா போனால் நாட்டுத்துரோகம் தேசத்துரோகம் சகோதரத்துரோகம் ஏகாதிபத்திய அடிவருடல எண்டு தொண்டை கொழிய கத்தினோம். இப்ப்ப பாகிஸ்தான் பொம்பிளைகிட்ட போய் நம்ம ஜனாதிபதிகிட்ட ஒருவாட்டி சொல்லுங்க மடம் நம்மளையும் கவனிக்க சொல்லி என நிக்கிறம். நம்மளுக்குத் தெரியும் நம்மட மினிஸ்ரர் மாருக்கு ஒரு மரியாதையும் அங்க இல்ல எண்டு. இதெல்லாம் நமக்கு அல்லாஹ் குடுத்த பரிசு!

    ReplyDelete
  4. உண்மையச் சொன்னீர்கள் அருமை நண்பரே.நம் தலைவர்களுக்கு, அரபு நாட்டு கோமாளிகளை ஏமாற்றுவதற்கு தான் .
    பதவி கொடுத்திருக்கிறார்கள்.இதைக் காட்டியே ஐந்து வருடங்களை ஓட்டி விடலாமே.எல்லாமே மஹிந்த மயம்.
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.