Header Ads



பொருளாதார யுத்தம் குறித்து சோமவன்ச அமரசிங்க எச்சரிக்கை

நாட்டின் பொருளாதார யுத்தம் ஒன்று இடம்பெறுவதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தத்துக்கு பின்னர் பொருளாதார யுத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நாட்டை அபிவிருத்தி செய்யும் யுத்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாடு அபிவிருத்திக்கு உட்படுத்தப்படுகிறது என்றால், எவ்வாறு விலைகள் அதிகரிக்கின்றன என்றும், எவ்வாறு வாழ்க்கைச் செலவு அதிகரிக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வாறாயின் இங்கு பொருளாதார யுத்தம் ஒன்று நடைபெறுவது உறுதியாகி இருப்பதாகவும், இதனால் வாழ்க்கைச் சுமை அதிகரித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.