Header Ads



நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சின் முக்கிய அறிவுரை..!


சந்தையில் உள்ள உணவுப் பொருட்களில் சீனி மற்றும் உப்பின் அளவு தொடர்பில் புதிய சட்டத்திட்டங்களை அமுலாக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாளொன்றுக்கு ஒருவருக்கு 5 கிரேம்ஸ் உப்பு தேவைப் படுகின்ற நிலையில், இலங்கையில் ஒருவரால் சராசரியாக 10 தொடக்கம் 15 கிரேம் உப்பினை தாம் உட்கொள்ளும் உணவில் சேர்த்துகொள்ளப்படுகிறது.

இதேவேளை தனிஒரு நபருக்கு நாளாந்தம் 10 தொடக்கம் 12 கிராம் சீனி தேவைப்படுகிறது.எனினும் இந்த அளவு நாளாந்தம் 60 கிராமை தாண்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் நீரிழிவு, இருதயநோய்கள், உயர் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான நோய்களால் இலங்கையில் மாத்திரம் நாளாந்தம் 600 பேர் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் நீரிழிவு நோயினால் வருடாந்தம் 100 பேர் தமது கால்களை இழக்கின்றனர்.

இந்த நிலையில் தொற்றாத நோய்கள் கொள்கை அடிப்படையில், சீனி மற்றும் உப்பு பாவனை தொடர்பில் புதிய சட்டத்திட்டதை அமுலாக்கவும், இது தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தவும் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

No comments

Powered by Blogger.