Header Ads



காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் மணித்தியாலத்துக்கு 2600 சீமெந்து பொதிகள்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் உற்பத்திகள் இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச சொத்து மற்றும் கைத்தொழில் அபிவிருத்தித்துறை அமைச்சின் செயலாளர் விலி கமகே தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை சீமெந்து ஆலை தமது பணிகளை ஆரம்பிக்கும் போது, வடக்கு  கிழக்கு உட்பட்ட இடங்களின் நிர்மாணப் பணிகளுக்கு அது பாரியளவில் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆலையில் ஒரு மணித்தியாலத்துக்கு 2600 சீமெந்து பொதிகளை உற்பத்தி செய்யமுடியும். இதன்படி வருடத்தில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 600 மெற்றிக் தொன் சீமெந்து உற்பத்தி செய்யப்படும் எனவும், வருடம் ஒன்றுக்கு 90 மில்லியன் ரூபாய்களை வருமானமாக எதிர்ப்பார்ப்பதாகவும் விலி கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த சீமெந்து உற்பத்திக்கான முழுமையான மூலப்பொருட்களும் யாழ்ப்பாணம், மன்னார். மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. 1950 ஆம் ஆண்டில், முன்àள் கைத்தொழில் அமைச்சராக இருந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தினால் அமைக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை போர் காரணமாக சேதமடைந்தததையடுத்து, செயற்படாமல் இருந்து வந்தது. தற்போது சுமூகநிலை தோன்றியதை அடுத்து தற்போது தொழிற்சாலை  புனரமைக்கப்பட்டு வருகிறது..

No comments

Powered by Blogger.