Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் கவனத்திற்கு..!



யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தினால் 2012 ஆம் ஆண்டுக்கான பதிவு செய்யப்பட்ட தேர்தல் வாக்களார் இடாப்புகளைத் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கான கலந்துரையாடல்கள் 17 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் பிரதேச செயலகங்கள் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் ரீதியாக ஆரம்பமாகவுள்ளதாக யாழ். மாவட்ட தேர்தல் திணைக்கள உதவித் தேர்தல் ஆணையாளர் பி.குகநாதன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ள எமது உறவுகள் புதிய வாக்காளர் இடாப்புகளின் தமது பெயர்கள் உள்ளனவா என்பதை இதன்மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள முடியுமென்பதை யாழ் முஸ்லிம் இணையம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

No comments

Powered by Blogger.