Header Ads



உயிர் தப்பினார் பிரான்ஸ் ஜனாதிபதி


பிரான்ஸ் அதிபர் பிராங்காய்ஸ் ஹோலன்ட் சென்ற விமானத்தின் மீது மின்னல் தாக்கியது. எனினும் இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

பாரிசில் உள்ள எலிசி அரண்மனையில் நடந்த பதவி ஏற்பு விழாவில் ஹோலன்ட் அதிபராக நேற்று செவ்வாய்கிழமை பொறுப்பேற்றார்.பதவி ஏற்ற சில மணி நேரங்களில், அவர் ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்று அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல்லை சந்தித்து, பொருளாதார சிக்கலுக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சு நடத்தினார்.

முன்னதாக அவர் பாரிசிலிருந்து "பால்கன் 7 எக்ஸ்' என்ற ஜெட் விமானத்தில் பெர்லின் புறப்பட்டார். புறப்பட்ட சிறிது நேரத்தில் இவர் விமானத்தின் மீது மின்னல் தாக்கியது. ஆனால், யாரும் காயமடையவில்லை. உடனடியாக இவரது விமானம் பாரிசில் உள்ள வில்லாகுப்ளே விமான படை தளத்துக்கு திரும்பியது. அங்கு விமானம் பரிசோதிக்கப்பட்ட பின் மீண்டும் புறப்பட்டு சென்றது.

புதிய பிரதமர் பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக ஜீன் மார்க் அயிரால்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஜீன் மார்க், பிரான்சில் உள்ள நேன்டஸ் நகர மேயராக இருந்தார். ஜீன் மார்க் நேற்று பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.

How does one say "omen" en français? On his first official day as the new president of France, François Hollande's plane was struck by lightning as he flew to Berlin for talks with German Chancellor Angela Merkel. No one was injured in the event, but the plane did turn back. Hollande then hoppped aboard a different jet. Merkel and Hollande's relationship has gotten off to a contentious start as the two have openly disagreed on how to solve Europe's financial woes, and Twitter user @rorybremner suspects the lightning bolt had nothing to do with a deity or a storm front: "Merkel 1 Hollande 0 ... Don't mess with Angela."

No comments

Powered by Blogger.