இலங்கையர்களின் உண்மையான சுதந்திர தினம் மே 19 ஆம் திகதிதான் - பிரதமர் ஜயரத்ன
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வீரம்மிக்க தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலின் கீழ் முப்படை வீரர்களதும் பொலிஸாரினதும் உயிர்த் தியாகங்கள் மூலமும் பெறப்பட்ட உன்னத சுதந்திரத்தை உயிரிலும் மேலாக மதித்துப் பாதுகாப்பது உயிர் நீத்த போர் வீரர்களுக்கு அளிக்கும் உன்னத கெளரவம் என பிரதமர் தி. மு. ஜயரத்ன தெரிவித்துள்ளார். யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு நிறைவை ஒட்டி விடுத்துள்ள செய்தியிலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
அச்செய்தியில் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையர்களின் உண்மையான சுதந்திர தினமான மே. 19 ஆம் திகதி கொண்டாடப்படும் இராணுவத்தினரை நினைவுகூரும் தினத்தினை முன்னிட்டு கெளரவபூர்வமான அபிமானத்துடன் வாழ்த்துச் செய்தியினை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். இற்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் உதயமான அந்த உன்னத தினத் தினை இலங்கையர்கள் மீட்டெழுந்த தினமென குறிப்பிடுவதில் எந்தவித விவாதத்திற்கும் இடமில்லையென நம்புகின்றேன்.
‘ஆயுதம் ஏந்தியவர்கள் ஆயுதத்தினாலேயே மடிவார்கள்’ என்ற புத்த பெரு மானின் வாக்கினை மெய்ப்படுத்தும் வகை யில் எமது தாய்நாட்டினை இரண்டாகத் துண்டாடக் கனவுகண்ட பிரபாகரன் உட்பட்ட பயங்கரவாதிகளின் முடிவானது கெட்ட எண்ணங்களைக் கொண்டவர்களும் பாவ காரியங்களைப் புரிபவர்களும் எமது தாய்நாட்டில் வாழ்வதற்கு அருகதை யற்றவர்கள் என்ற உண்மையினை உணர்த்தியுள்ளது.
இன்று நாம் சுதந்திர இலங்கையர்கள் மட்டுமன்றி, எவருக்கும் அடிபணியாத இந்தச் சுதந்திர தேசத்தின் மக்களாகவும் இருக்கின்றோம். சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர் போன்ற நாம் அனைவரும் ஒரே இலங்கைத் தாயின் மக்களாக வாழ்கின்றோம். இலங்கை மாதாவின் மக்களாகிய எம்மால் நம் நாட்டிற்கெதிரான எந்தவொரு சக்தியையும் தோற்கடிக்க முடியுமெனவும் இந்த நாட்டின் அபிவிருத்திக்கான போரையும் உயர்ந்த மட்டத்தில் வெற்றி கொள்ள முடியுமெனவும் நான் உறுதியாக நம்புகின்றேன் என்று பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவரை நாங்கள் ஒரு பிணம் எண்றே அலைக்கலாம்.
ReplyDeleteஆயுதமேந்தியவர்கள் ஆயுதத்தால் சாவார்கள் என்றால்,ஒரு நாட்டின் ஆயுதப் படைக்கும் இதே நிலையா?உண்மையான விடுதலைப் போராட்டமாக இருந்தால் வெற்றி நிச்சயம்.ஏதோ வெளி நாட்டுடன் போரிட்டு வெற்றி பெற்றதாக நினைக்கிறீர்களா?உள்நாட்டு பாசிச, பயங்கரவாதிகளை இல்லாமல் செய்து விட்டு,அதே தொழிலை நீங்களும்,உங்கள் இன வெறி அரசும் ,ஒரு சில தேரர்களும் செய்கிறீர்கள்.
ReplyDeleteயுத்த வெறியைக் கொண்டாடவேண்டுமேன்றால் ,இந்தியாவுடன் யுத்தம் செய்து புத்தருடைய புண்ணிய பூமி புத்தகாயா,கச்சதீவு போன்றவைகளை
வெற்றி கொள்ளவேண்டும்.
இனிமேல்தான் சிங்கள,தமிழ்,முஸ்லிம்,கிருஸ்தவ,மலே,பறங்கியர் சேர்ந்து விடுதலை பெற்று உண்மையான சுதந்திரம் பெற வேண்டும்.
எல்லோரும் ஒரே நாட்டு மக்கள் என்று வாய் தான் சொல்கிறது.மனது?பாவத்தின் சம்பளம் மரணமென்றால், நீங்கள் செய்யும் துரோகத்தின்
சம்பளம்,என்ன பிரதமரே!தலைவன் என்றால் இன;மதவெறி இல்லாத,வார்த்தை சுத்தமுள்ளவனாக இருக்க வேண்டும்.அதுதான் எவரிடமுமில்லையே.புத்த பெருமானின் வார்த்தைகளையாவது நம்பி நடவுங்கள்.
Meraan
பாசிசப் புலிப்பயங்கரவாதிகளிடமிருந்து எமது நாடு சுதந்திரம் பெற்று விட்டது.... இதை விட பயங்கரமான ஒரு இனவாத சக்தி எமது நாட்டிலே உருவாகிக் கொண்டிருக்கிறது.அந்த சக்தியிடமிருந்து எமது நாடு விடுதலை அடைவது எப்போது?
ReplyDeleteமாஃபாஸ் சகோ,
ReplyDeleteஇனவாத சக்தி இன்று உருவாகிக்கொண்டிருக்கவில்லை இது எப்போதே உருவாகி விட்டது.ஆனால் நாம் தான் பதவிக்காக அவர்களை ஒட்டி உறவாடிக்கொண்டிருந்தோம். அச்சக்திக்கு உலகெல்லாம் அறபு ச்கோக்களிடம் இருந்து கள்ள ஆதரவைப்பெற்றுக்கொடுத்து வாழ்ந்து கொண்டிருந்தோம். இனிமேல் மற்ற மக்களிடம் உதவி கேட்க முடியாத நிலையில் இருக்கிறோம். வெறும் கதையடிப்புகள் சரிவராது சகோ!