Header Ads



குடும்ப கட்டுப்பாட்டு தடுப்பூசி (D.M.G.A) இடைநிறுத்த சுகாதார அமைச்சு தீர்மானம்

குடும்ப கட்டுப்பாட்டிற்காக பெண்களுக்கு வழங்கப்படும் டி.எம்.ஜி.ஏ (D.M.G.A) எனப்படும் தடுப்பூசியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த தடுப்பூசி தொடர்பில் மேறகொள்ளப்பட்ட விசேட ஆய்வுகளைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வாசனைத் திரவியங்கள் மற்றும் ஔடதங்கள் அதிகார சபையின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த பெனரகம குறிப்பிட்டார். இந்த தடுப்பூசியைப் பயன்படுத்தியதன் பின்னர் பெண்கள் பல்வேறு உடலியல் அசௌகரியங்களுக்கு உள்ளானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் தற்போது வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படுவதால் எதிர்காலத்தில் அதனைத் தொடர்ந்து அவ்வாறே மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.  எவ்வாறாயினும், மக்கள் இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என வாசனைத் திரவியங்கள் மற்றும் ஔடதங்கள் அதிகார சபையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

தற்போது களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை அகற்றுவதற்கும் தரமான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  D.M.G.A எனப்படும் தடுப்பூசி வகையை பயன்படுத்த வேண்டாமென சுகாதாரத் துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வாசனைத் திரவியங்கள் மற்றும் ஔடதங்கள் அதிகார சபையின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.


No comments

Powered by Blogger.