Header Ads



குஜராத்தில் 23 முஸ்லிம்களை உயிருடன் எரித்துக்கொன்ற 18 பேருக்கு ஆயுள் தண்டனை


குஜராத்தின் ஒடே கிராமத்தில் 23 முஸ்லிம்களை உயிருடன் எரித்துக் கொன்ற வழக்கில் 18 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம்இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இதர 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 23 பேர் கொல்லப்பட்ட இந்த வழக்கில் 23 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ நீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பளித்தது. மேலும் 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன.இதில் 18 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எனினும் கொல்லப்பட்ட 23 பேரின் குடும்பத்தினரும் என சரியான தீர்ப்பு அல்ல என்று நீதிமன்றத்துக்கு வெளியே கோஷம் எழுப்பினர்.

No comments

Powered by Blogger.