Header Ads



கொழும்பு வெள்ளத்தில் மூழ்கியது - 600 பேர் இடம்பெயர்வு

கொழும்பில் இன்று வியாழக்கிழமை முற்பகல் பெய்த மழை காரணமாக கிராண்ட்பாஸ் மஹவத்தை பிரதேசம் வௌ்ளநீரில் மூழ்கியுள்ளது.

வௌ்ளநிலைமை காரணமாக சுமார் 600 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர்  சரத் லால் குமார குறிப்பிட்டுள்ளார்.

அந்த பிரதேசத்தின் கால்வாய் ஒன்று தடைப்பட்டதால் வௌ்ளநீர் வடிந்தோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட இடர் முகாமைத்துவ இணைப்பதிகாரி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அந்த பகுதியின் நிலைமை குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை இன்று காலை 8.30ற்கு நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் இரத்மலானை பிரதேசத்திலேயே அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.