'அடிடாஸ்' நிறுவன உற்பத்திப் பொருள்களைப் பகிஷ்கரிக்க அழைப்பு
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் பலஸ்தீன் மக்களின் நிலத்தைப் பலவந்தமாகப் பறித்து, அவர்களின் சுயநிர்ணய உரிமையை முற்றாக நிராகரித்து வருகிறது.
நியாயமற்ற தொடர் கைதுகள், ஆட்கடத்தல்கள், சித்திரவதைகள், படுகொலைகள், சட்டவிரோதக் குடியேற்ற விஸ்தரிப்பு, புனித நகரான ஜெரூசலத்தை யூதமயப்படுத்துதல், மண்ணின் மைந்தர்களை அகதிகளாக்குதல் முதலான அராஜகங்களை அரங்கேற்றி வருகின்றது.
நியாயமற்ற தொடர் கைதுகள், ஆட்கடத்தல்கள், சித்திரவதைகள், படுகொலைகள், சட்டவிரோதக் குடியேற்ற விஸ்தரிப்பு, புனித நகரான ஜெரூசலத்தை யூதமயப்படுத்துதல், மண்ணின் மைந்தர்களை அகதிகளாக்குதல் முதலான அராஜகங்களை அரங்கேற்றி வருகின்றது.
இதேவேளை, இஸ்ரேலின் அடாவடித்தனங்களுக்கு எதிராக பலஸ்தீன் மக்கள் இன்றளவும் போராடி வருகின்றனர். தமது மண்ணை மீட்கும் நீண்ட போராட்டத்தில் அவர்கள் இழந்தவை மிக அதிகம். இஸ்ரேலிய சட்டவிரோத முற்றுகைக்கு உட்பட்டு இருக்கும் காஸா மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் பிற பகுதிகளில் வாழும் பலஸ்தீனர்களின் அவல வாழ்வு குறித்து சர்வதேச உலகின் கவனம் மெல்ல மெல்லத் திரும்பி வரும் இத்தருணத்தில், இஸ்ரேல்சார்பு நிறுவனங்களைப் பகிஷ்கரிக்கும் சாத்வீகப் போராட்டம் உலகெங்கும் முனைப்புப் பெற்று வருகின்றது.
இந்நிலையில், பலஸ்தீன் மக்கள் தலைவர்களுள் ஒருவரான இஸ்ஸத் அல் ரிஷீக், இஸ்ரேலிய மரதன் ஓட்டப் போட்டிக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ள இஸ்ரேல் சார்பு "அடிடாஸ்" நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களைப் பகிஷ்கரிக்க முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ஸத் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் இஸ்ரேல் ஒழுங்குசெய்துள்ள விளையாட்டுப் போட்டிக்கு அனுசரணை வழங்கும் "அடிடாஸ்" உற்பத்திப் பொருள்களைப் புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, அதே தினத்தில், "ஜெரூசலம் நம்முடையது" என்ற தொனிப் பொருளில் மற்றொரு மரதன் ஓட்டப் போட்டி இடம் பெறவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


Post a Comment