Header Ads



சூடு பிடிக்கும் பிரதேசவாதம் - பரிதாபத்தில் கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகம்

கிழக்கு மாகாண முதலமைச்சராக கிழக்கைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்படவேண்டுமென மு.காவின் பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்திருக்கும் நிலையில், இந்த சர்ச்சைக்கு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் இணக்கம் கண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு மக்களின் விருப்பத்திற்கிணங்க குறித்த பொதுவேட்பாளர் தெரிவு இடம்பெறும். இது தொடர்பில் சகல தகைமையும் பெற்ற ஒருவருடன் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது என முஸ்லிம் கட்சியொன்றின் உயர் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, சட்டத்தரணி நிஸாம் காரியப்பரை தமிழ் ஊடகமொன்று தொடர்புகொண்டு அ.இ.ம.காவில் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கேட்டபோது மு.கா. என்ற எனது கட்சிக்குள்ளிருந்துதான் எனது கருத்தைப் பலமாக முன்வைக்கவுள்ளேன்.

வேறொரு கட்சியில் இணைந்து கொள்ளுமளவுக்கு எந்தவொரு தேவைப்பாடும் இப்போதைக்கு இல்லை. கிழக்கைச் சேர்ந்தவர்தான் கிழக்கு மாகாண முதலமைச்சராக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.

மு.கா.தலைவசர் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுமளவுக்கு கிழக்கில் பிறந்த தகுதியான எவரும் இல்லையா?,எங்களைப் போன்றவர்களையெல்லாம் கட்சியைவிட்டு விலக்கிவிட்டுத் தனக்கு வேண்டியவர்களை வைத்துக்கொண்டு கட்சி அதிகாரத்தைப் பயன்படுத்த முனைகிறார். கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. கட்சிக்குள் இருந்துகொண்டுதான் எனது கருத்தை மேலும் வலுப்படுத்துவேன் என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.