Header Ads



தாக்குதலுக்கு 2 மாதம் ஒத்திகைப் பார்த்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று முன்தினம் மதியம் முற்றுகையிட்டு தலிபானகள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கு பாராளுமன்றம், தூதரக அலுவலகங்களில் தாக்குதல் நடத்தினர். ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் கூட்டாக அதிரடி தாக்குதல் நடத்த  2 மாதம் ஒத்திகை மேற்கொண்ட செய்தி தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து தலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஷபியுல்லா முஜாகித் கூறியதாவது, 

நேட்டோ படையின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அவர்களை மீறி தாக்குதல் நடத்துவது குறித்து எங்களது நிபுணர்கள் வரைபடம் மூலம் வியூகம் வகுத்தனர். அதற்கு தகுந்தாற்போன்று தாக்குதல் ஒத்திகைக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்காக 30 தற்கொலைப்படைகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தாக்குதல் நடத்தவேண்டிய இடங்களில் எப்படி நுழையவேண்டும். அந்த பகுதிகளை கைப்பற்றுவது எப்படி? என்பன போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.

50 ஆயிரம் நேட்டோ மற்றும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரை சமாளிக்கவும், சக்தி வாய்ந்த எந்திர துப்பாக்கிகள், தற்கொலை ஆடைகள் அணிவது உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. மேலும், தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் எந்திர துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகளை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் முன்பே வைத்தோம் என்று கூறினார்.  

இந்த தாக்குதலில் ஹக்கானிகள் ஈடுபடவில்லை. அவர்களும் தலிபான்களின் ஒரு பிரிவினர்தான். இருந்தாலும் தாக்குதலில் உதவும்படி அவர்களை கேட்டு கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.