Header Ads



கட்டார் பயணமானார் ரவூப் ஹக்கீம் - யூசுப் அல் கர்ளாவியையும் சந்திக்கிறார்

நீதி அமைச்சின் ஊடக பிரிவு

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை கட்டாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கட்டார் நீதி அமைச்சர் ஹஸன் பின் அப்துல்லா அல் கனீமின் அழைப்பை ஏற்று விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஹக்கீம், நீதித்துறை மற்றும் இரசாயன பகுப்பாய்வு போன்றவை தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

இதன்போது, இரு தரப்பு உறவுகள் குறித்தும் பரஸ்பரம் ஆராய நீதி அமைச்சருடன் உயர்மட்ட தூதுக்குழுவொன்றும் விஜயம் மேற்கொண்டுள்ளது. சமகால உலகின் தலைசிறந்த இஸ்லாமிய பேரறிஞர் கலாநிதி யூசுப் அல் கர்ளாவி ஆகியோரையும் அமைச்சர் ஹக்கீம் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்

No comments

Powered by Blogger.