சுவிஸ் விமான நிலையத்தில் பலஸ்தீன ஆதரவாளர்கள் 50 பேர் தடுத்துவைப்பு
இஸ்ரேல் அதிகாரிகள், ஐரோப்பாவிலிருந்து வரும் பாலஸ்தீனிய ஆதரவாளர்களை தனது நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் இவர்கள் சுவிட்சர்லாந்தின் விமானநிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் சுமார் 50 பேர் மேசெல், ஜெனீவா, ஜுரிச் போன்ற ஊர்களிலிருந்து நேற்று இஸ்ரேலுக்கு செல்ல விமானநிலையங்களுக்கு வந்தனர்.
இவர்களை பாலஸ்தீனத்திற்குள் அனுமதிக்க இஸ்ரேல் மறுத்ததால் முதலில் அதன் தலைநகரமான டெல் அவிவுக்குச் செல்லும் விமானங்களில் ஏற சுவிஸ் விமானநிலையங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. உடனே இந்தப் பயணிகள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் ஒருவரை மட்டும் காவலர் அழைத்து விசாரித்தனர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.
பேசெல் விமான நிலையத்திலும் இத்தகைய போராட்டம் நடைபெற்றதாக அங்குள்ள செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் 28 பேர் போராட்டம் நடத்தினர். இவர்களின் வருகை டெல் அவிவுக்குத் தெரிவிக்கப்பட்ட பின்பு இவர்களுக்குப் பயண அனுமதி வழங்கப்பட்டது.
பாலஸ்தீனத்துக்கு வருக என்ற பெயரில் புறப்பட்ட பயணிகளின் செய்தித்தொடர்பாளர் அனஸ் முஹமது 20 செயற்வீரர்கள் திட்டமிட்டபடி டெல் அவிவுக்கு பயணம் மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார். ஜுரிச் விமானநிலையத்தில் முதலில் தடுக்கப்பட்டவர்களும் பின்பு டெல் அவிவுக்குப் புறப்பட்ட அனுமதி பெற்றனர்.
சுவிட்சர்லாந்திலிருந்து நேற்று டெல் அவிவ் புறப்பட்டவர்களில் நான்கு பிரெஞ்சுப் பெண்களும் இருந்தனர். இவர்கள் டெல் அவிவ் சென்று சேர்ந்ததும் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இவர்களோடு இன்னும் ஐந்து செயற்வீரர்களும் உடனடியாக தங்களது நாட்டுக்குத் திரும்பி அனுப்பப்படுவர் என்று இஸ்ரேலின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment