இலங்கையில் பூமியதிர்வை கண்டறியும் கருவிகள் செயலிழந்தன..?
இலங்கையில் பூமியதிர்வுகளை கண்டறியும் கருவிகள் செயலிழந்த நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பூமியதிர்வு மற்றும் சுனாமி போன்ற பேராபத்துக்களை கண்டறிவதற்காக பயன்படுத்தப்படும் விசேட கருவிகள் உரிய முறையில் இயங்குவதில்லை என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நிலத்திலும் நீரிலும் ஏற்படக் கூடிய அதிர்வுகளை கண்டறியும் நான்கு விசேட கருவிகள் செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது. போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படாத காரணத்தினால் இந்த கருவிகள் பழுதுபார்க்கப்படவில்லை. பேராதனை, அனுராதபுரம், ஒலுவில் மற்றும் றுஹூண ஆகிய பிரதேசங்களில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் இயங்குவதில்லை.
முக்கியமான கருவிகள் இயங்காமை அனர்த்த நிலைமைகளின் போது பெரும் ஆபத்தாக அமையக் கூடும் என ஓய்வு பெற்ற பூவியியல் பேராசிரியர் கபில தஹாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் தென் மேற்கு பகுதியில் பூமியதிர்வு ஏற்படக் கூடும் என்பது வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சுனாமி மற்றும் பூமியதிர்வு போன்ற பேராபத்துக்கள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment