Header Ads



யாழ்ப்பாணத்தில் 37 ஆயிரத்து 759 பேருக்கு தொழில் இல்லை

யாழ்.மாவட்டத்தில் 3லட்சத்து 31 ஆயிரத்து 776 பேர் பல் வேறுபட்ட தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அதேவேளை 37 ஆயிரத்து 759 பேர் வேலைவாய்ப் பின்றி இருப்பதாக யாழ். மாவட்ட செயலக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

அதில் 613 ஆயிரத்து 866 பேர் யாழ்ப்பாணத்தில் தற்போது வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் அரைவாசிக்கு மேலதிகமாக 331 ஆயிரத்து 776 பேர் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரச பணியில் 51 ஆயிரத்து 607 பேரும், தனியார் துறைகளில் 23ஆயிரத்து 665 பேரும், விவசாயத் துறையில் 141 ஆயிரத்து  966 பேரும் மீன்பிடித் தொழிலில் 53 ஆயிரத்து 15 பேரும் ஏனைய தொழில்க ளில் 23ஆயிரத்து 764 பேரு மாக 3லட்சத்து 31  ஆயிரத்து 776 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

37 ஆயிரத்து 759 பேர் எதுவித தொழில் நடவ டிக்கைகளும் இல்லாமல் தொழில் தேடுநராக உள்ள னர். இவர்களுள் வேலையற்ற பட்டதாரிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.