Header Ads



இலங்கை பலதடவைகள் சுனாமி அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ளதாம் - ஆய்வில் தகவல்

இலங்கைக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தங்கள் தொடர்பில் புவியியல் மற்றும் அகழ்வாராய்ச்சி பிரிவு ஆராய்ந்துள்ளது. கலாநிதி நாலக ரணசிங்க வெளிநாட்டு பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைந்து விடயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளதாக  பிரிவின் தலைவர் கலாநிதி என்.பி.விஜயானந்த தெரிவித்துள்ளார்.

கடந்த 1500 தொடக்கம் 2500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் ஏற்பட்ட சுனாமி நிலைமைகள் தொடர்பில் இந்த ஆராய்ச்சியில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதிகளில் இலங்கையில் ஐந்து தொடக்கம் ஏழு வரையான சுனாமி அனர்த்தங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இலங்கைக்கு மேலும் பல சுனாமி அனர்த்தங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள கலாநிதி என்.பி.விஜயானந்த, இது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.