கிரிந்த பகுதியில் கடல் உள்வாங்கியது - விழிப்புடன் செயற்பட தொடர்ந்து அறிவுறுத்தல்
இந்தோனேசியாவில் மீண்டும் 3ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது. 8.2 ரிச்டர் அளவில் இது உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை இந்த சமுத்திரத்தின் நீர்மட்டம் 17 செ.மீ அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தென் மாகாணத்தில் கிரிந்த பகுதியில் கடல் உள்வாங்கியதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்த தெரிவித்துள்ளார். எனினும் அப்பகுதி மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்
பொத்துவில் பகுதியை சுனாமி அலைகள் தாக்கலாம் எனவும் ஏற்கனவே விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை மேலும் 3 மணித்தியாலங்களால் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Post a Comment