ஹமீத் கர்சாய் தப்பினாராம்..! - தலிபான்களை எதிர்த்து தாக்குதல் நடத்திய எம்.பி.க்கள்
ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்த தலிபான்கள் அமெரிக்க படையின் உதவியுடன் கடந்த 2001-ம் ஆண்டு அடித்து விரட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ படையின்' கண்காணிப்பில் உள்ளது. தற்போது, ஹமீது கர்சாய் அதிபராக பதவி வகித்து வருகிறார். இருந்தும் இழந்த ஆட்சி அதிகாரத்தை திரும்ப பெற தலிபான்கள் 'நேட்டோ' படையுடன் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தானில் நேற்று ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதலில் ஈடுபட்டனர். தலைநகர் காபூலில் உள்ள பாராளுமன்றம் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் மீது ராக்கெட்டுகளையும், வெடிகுண்டுகளையும் வீசி அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள வேறு மாகாணங்களிலும் தலிபான்களின் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.
நங்கரஸ் மாகாணம் ஜலலா பாத் விமான நிலையம், லோகர் மாகாணத்தில் கவர்னர் மாளிகை, போலீஸ் துறை அலுவலகம், மாகாண புனரமைப்பு குழு வளாகம், மாகாண உளவுத் துறை கட்டிடம், பக்தியா மாகாணத்தில் பல்கலைக் கழகம், விமான நிலையம், போலீஸ் தலைமையகம், உளவுத்துறை கட்டிடம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தலிபான்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் 'நேட்டோ' படை ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தின.
இந்த சண்டைகளில் 25-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அவர்களில் 19 தலிபான்கள அடங்குவர். இந்த தாக்குதலில் தலிபான்களின் ஒரு பிரிவான ஹக்கானி குழு ஈடுபட்டு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காபூலின் முக்கிய பகுதியில் உள்ள 'காபூல் ஸ்டார்' என்ற 5 நட்சத்திர ஓட்டலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தாக்குதலை தொடர்ந்தகள் பாராளுமன்றம் எதிரே உள்ள 6 மாடி கட்டிடத்தை கைப்பற்றினர்.
அங்கிருந்து தாக்குதலை நடத்தினர். பாராளுமன்றம் மற்றும் தூதரக அலுவலகங்களை தொடர்ந்து அதிபர் ஹமீது கர்சாய் தங்கியிருக்கும் மாளிகையின் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். முன்னதாக காபூலில் 3 இடங்களில் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியபோது பட்ஜெட் தயாரிப்பு பணியில் அதிபர் கர்சாய் ஈடுபட்டிருந்தார். இதை அறிந்த மெய்க்காப்பாளர்கள் அவரை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.
அதன் பின்னர்தான் அதிபர் மாளிகையின் மீது ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதால் அவர் உயிர் தப்பினார். இதைத் தொடர்ந்து அதிபர் கர்காயின் பிற்பகல் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அவர் தலிபான்களின் மற்றொரு குழுவுடன் அமைதி பேச்சு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே கர்காயின் மெய்க்காப்பாளர்களில் முக்கியமான 2 பேரை கொலை செய்வதுதான் தலிபான்களின் முக்கிய குறியாக இருந்தது. அவர்களில் முகமது கறீம் காலிசி என்பவரும் ஒருவர். அவர் வீடு மேற்கு காபூலில் உள்ளது. அங்கு சென்ற 2 தற்கொலை படை வாதிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடி குண்டுகள் தற்கொலை உடைகள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பாராளுமன்றத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியகளை எதிர்த்து எம்.பி.க்கள் தங்கள் பாதுகாவலர்களுடன் சேர்ந்து துப்பாக்கி சண்டை போட்டனர். அவர்களில் முகமதுநகிம் லலைஹமித்சாயும் ஒருவர். அவர் மட்டும் நோக்கி 400 முதல் 500 குண்டுகளால் சுட்டார். நான் மக்களின் பிரதிநிதி, அவர்களை காப்பாற்ற வேண்டியது எனது கடமை. எனவேதான் தீவிரவாதிகளை எதிர்த்து போராடினேன் என்றார்.
இதுபோன்று பல எம்.பி.க் கள் துணிச்சலுடன் சண்டையிட்டனர். எனவே தான் தலிபான்கள் பாராளுமன்றத்தில் இருந்து தலை தெறிக்க ஓடிவிட்டனர். தற்போது நேட்டோ படையின் ஹெலிகாப்டர்கள் பதுங்கியிருக்கும் தலிபான்களை கண்காணித்து அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இதனால் காபூலில் இன்றும் பதட்டமும், பரபரப்பும் தொடர்கிறது.

Post a Comment