Header Ads



தலிபான்களின் 18 மணிநேர தொடர் தாக்குதல் முடிவுக்கு வந்தது

ஆப்கானிஸ்தானில் நேற்று ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதலில் ஈடுபட்டனர். தலைநகர் காபூலில் உள்ள பாராளுமன்றம் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் மீது ராக்கெட்டுகளையும், வெடிகுண்டுகளையும் வீசி அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.

மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள வேறு மாகாணங்களிலும் தலிபான்களின் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். நங்கரஸ் மாகாணம் ஜலலாபாத் விமான நிலையம், லோகர் மாகாணத்தில் கவர்னர் மாளிகை, போலீஸ் துறை அலுவலகம், மாகாண புனரமைப்பு குழு வளாகம், மாகாண உளவுத்துறை கட்டிடம், பக்தியா மாகாணத்தில் பல்கலைக் கழகம், விமான நிலையம், போலீஸ் தலைமையகம், உளவுத்துறை கட்டிடம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  
     
ஆப்கானிஸ்தான் ராணுவமும் தலிபான்களின்  துப்பாக்கி சண்டை நடத்தியது. இந்த தாக்குதலில் 36 தலிபான் வாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனவே துப்பாக்கி சண்டை நடந்த பாராளுமன்றமும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது.  

இதையடுத்து 18 மணி நேரம் தலிபான்களுடன் நடந்த சண்டை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இதை காபூல் தலைமை போலீஸ் அதிகாரியின் செய்தி தொடர்பாளர் ஹஷ்மதுல்லா ஸ்டானிக் ஷாய் அறிவித்தார். இருந்தும் தலிபான் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்

No comments

Powered by Blogger.