''உம்மா நான் எப்போது வீட்டுக்கு வருவேன்'' - தாயிடம் கேட்ட மகள்..!
சவூதி ஆரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை பணிப்பென் றிசானா ''தான் எப்போது வீட்டுக்கு திரும்புவேன், ''நான் விரைவில் வீடுவர வேண்டும்'' என திரும்பத் திரும்ப கூறிவருவதாக டாக்டர் கிபாயா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் சகோதரி றிசானா நபீக்கின் தாயார் தெரிவித்துள்ளதாவது,
கடந்தவாரம் மகள் றிசானா நபீக்குடன் கதைத்தேன். சவூதியில் டாக்டராக பணியாற்றும் கிபாயா சிறைக்கு சென்றிருந்தபோது மகளுடன் தொலைபேசியில் உரையாட வாய்ப்பு கிட்டியது. ''தான் எப்போது வீட்டுக்கு திரும்புவேன், ''நான் விரைவில் வீடுவர வேண்டும்'' என திரும்பத் திரும்ப றிசானா கூறினாள்.
எதிர்வரும் ரமழான் மாதத்தில் மகளின் விடுதலைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக டாக்டர் கிபாயா தன்னிடம் கூறியதாகவும் றிசானாவின் தாய் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment