இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் - நடுங்குகிறது அமெரிக்கா
செம்டெம்பர் ஒன்பது தாக்குதல் போன்று மீண்டும் ஒரு பாரிய தாக்குதலை மேற்கொள்வதற்கான வல்லமையை அல் கைய்தா இயக்கம் இழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புலனாய்வு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
இராசாயனம், உயிரியல், அணு அல்லது கதிரியக்க ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் வாய்ப்பு உயர்ந்த மட்டத்தில் காணப்படாது எனவும் அமெரிக்க அரச அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எனினும் நாட்டிற்குள் உருவாகும் கடும்போக்குவாதிகள் குறித்து அமெரிக்க பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். அல் கைய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பில்லாடன் கொல்லப்பட்டு, ஒராண்டு நிறைவடைகின்ற நிலையில், அமெரிக்க அதிகாரிகள் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Post a Comment